1 வருடத்திற்கு குண்டர் சட்டம்..கலெக்டர் போட்ட மாஸ் உத்தரவு | Rowdy Baby Surya | Sikka

வெளியிட்டது

ரவுடி பேபி சூர்யா என்று சொன்னால் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்த பெயர் பிரபலம். திருப்பூரைச் சேர்ந்தவர் தான் சூர்யா என்கிற சுப்புலெட்சுமி. இவரை இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது. தனக்குத் தானே ரவுடி பேபி சூர்யா என்று பெயரை மாற்றிக் கொண்டு வலம் வந்தார். டிக்டாக்கில் கவர்ச்சியாக நடனம் ஆடி அதன் மூலம் புகழ் பெற்றார். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சிக்கந்தர் என்பருடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தனர். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு. டிக்டாக்கில் இவர் செய்கைகள் பிடிக்காததால் அவரது கணவர் அவரை விவாகரத்து செய்து விட்டார். தனியாக வாழ்ந்து வந்த சூர்யா அடிக்கடி பல பிரச்சினைகளில் சிக்குவார். ஆனால் அவர் மீது பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாமல் இருந்து வந்தது.

1 வருடத்திற்கு குண்டர் சட்டம்..கலெக்டர் போட்ட மாஸ் உத்தரவு | Rowdy Baby Surya | Sikka 1
யூடியூப் சேனலில் சிக்கா மற்றும் இருவரும் மிகவும் மோசமாக பேசி சண்டை போடுவது போன்று வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அதே போல் தனக்கு எதிரான போட்டியாளர்களை மோசமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்து வந்தனர். கோவையைச் சேர்ந்த தம்பதிகளைப் பற்றி இவர் பேசியது மிகுந்த சர்ச்சையானது. அவர்களின் குழந்தைகளைப் பற்றியும் மோசமாக பேசினர். மேலும் காவல்துறையால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று வாய் சவடால் விட்டனர்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கோவையைச் பெண் கோவை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன் பேரில் சூர்யா மற்றும் சிக்காவை சிறையில் அடைத்தனர். தற்போது இவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் தமிழகம் முழுவதும் புகார் உள்ளதால்சைபர் கிரைம் வழக்கை மேற்கோள் காட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பரிந்துரை செய்து இவர்கள் இருவரையும் 1 வருடம் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இவர்கள் இருவரும் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இணையத்தை தவறாக பயன்படுத்தும் ஒவ்வொருவர் மீதும் இவ்வாறு சட்டங்கள் தன் கடமையை செய்ய வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு. Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்