“கையில் வெட்டிய தலையுடன் முறைத்துக்கொண்டிருக்கும் ருத்ரன்”!!”கொஞ்ச நாள் பேய் படங்களுக்கு லீவு விட்டுருக்கும் லாரன்ஸ்”!! ருத்ரன் படத்தின் ஃ வெளியீடு

வெளியிட்டது

"கையில் வெட்டிய தலையுடன் முறைத்துக்கொண்டிருக்கும் ருத்ரன்"!!"கொஞ்ச நாள் பேய் படங்களுக்கு லீவு விட்டுருக்கும் லாரன்ஸ்"!! ருத்ரன் படத்தின் ஃ வெளியீடு 1

துணை நடன இயக்குனராக இருந்து பின்னர் நடன இயக்குநராகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து நாயகனாகவும், இயக்குனராகவும் இப்பொது பிரபலமாக வளம் வருபவர் ராகவா லாரன்ஸ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலுள்ள சூப்பர்ஸ்டார் நடிகர்களுக்கும் இவர் நடன அமைத்துள்ளார். அதன் மூலம் முதல் முறையாக இயக்குனராக தெலுங்கில் “மாஸ்” என்ற படத்திலும், தமிழில் ஸ்டைல் ” என்ற படத்திலும் அறிமுகமானார். ஆனால் 2007ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்து வெளியான “முனி”  படம் இவருடைய திரை வாழ்க்கையின் மிக முக்கிய விஷயமாக மாறியது.

அதன் முதல் இப்பொது தமிழில் பேய் படம் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான் என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து பேய் படங்களாகவே நடித்து வருகிறார். காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, சிவலிங்கா, இப்பொது அறிவிக்கப்பட்டு எதிர்பார்ப்பி எகிற செய்துள்ள சந்திரமுகி 2 என அனைத்துமே பேய் படங்கள் தான். நடுவுல சில நார்மல் படங்களுலும் நடித்து வருகிறார்.

ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘Evil is not Born. It is Created’ என்ற டேக் லைனை இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தாங்கி நிற்கிறது. இந்தப் போஸ்டரில் ராகவா லாரன்ஸ் அதிரடி சண்டைக் காட்சியில் மிரட்டுவதை போல உள்ளது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். படம் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் எனவும் இந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முடிந்த கையொசு லாரன்ஸ் அடுத்து சந்திரமுகி 2 படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. அதனை அடுத்த இவர் காஞ்சனா படத்தின் அடுத்தகட்ட வேலைகளில் இறங்கவுள்ளார்.

சந்திரமுகி 2 படத்தில் நடிகர் வடிவேலு மட்டுமே இப்போதைக்கு ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குனர் பி.பசுவே இயக்க, லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். கீரவாணி இசையமைக்க இதுற்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நாயகியாக நடிக்க ஆண்ட்ரியா மற்றும் ராஷி கன்னா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்த பட்டு வருவது கூறப்படுகிறது,

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்