
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். கோவில்களுக்கும் ஜோடியாக சென்று வந்தார்கள். வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றினார்கள். அந்த புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, திடீரென்று நயன்தாரா தனது புகைப்படங்களை மட்டும் சமூக வலைத்தளத்தில் பகிர தொடங்கினார்.
விருது வழங்கும் விழா ஒன்று சமீபத்தில் நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சியிலும் அவர் மட்டும் கலந்து கொண்டார். எப்போதும் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்தே செல்லும் அவர் இப்போது தனியாக விழாக்களில் பங்கேற்பதையும் தனது புகைப்படங்களை மட்டுமே வலைத்தளத்தில் பகிர்வதையும் பார்த்தும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், இருவருக்கும் காதல் முறிந்து விட்டது என்று வலைத்தளத்தில் தகவல் பகிர்ந்து வந்தனர். இருவரும் பிரிந்து விட்டீர்களா? என்றும் அவர்களிடையே ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியாகி அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு காதல் முறிவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.