பிக்பாஸ் வீட்டில் செல்போன் உபயோகமா? வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

சின்னத்திரையில் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோவாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மொபைல் போன் உபயோகித்ததாக வீடியோ ஆதாரம் ஒன்றை ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ரியாலிட்டி ஷோக்கலிலேயே முதலிடம் பிடித்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. 6 சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி, தற்போது ஏழாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவில் இந்த சீசனில் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரண்டு வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொடங்கிய நாளிலிருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுபவர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமைக்க வேண்டும், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்கிற விதிமுறைகள் இருப்பதால் சண்டை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் செல்போன் உபயோகமா? வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய நெட்டிசன்கள்.! 1

இது ஒருபுறம் இருக்க ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றம், ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்கள், இரட்டை வெளியேற்றம் என்று அடுத்தடுத்த அதிரடிகளை பிக் பாஸ் குழுவினர் செய்து வருகின்றனர். இந்த பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் செல்போ உபயோகித்து வருகிறார்கள் என்று கூறி நெட்டிசன்கள் இணையத்தில் வீடியோ ஒன்றை பரப்பி வருகின்றனர். அதில் அர்ச்சனா, விசித்ரா, பிராவோ ஆகியோர் அமர்ந்து வீட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அர்ச்சனா தனக்கு வீட்டு ஞாபகம் அதிகமாக வருவதாக கூறுகிறார். அப்போது குறிக்கிடும் விசித்ரா, “நீ தான் தினமும் உனது வீட்டுக்கு பேசிக் கொண்டிருக்கிறாயே” என்று கூறுகிறார்.


இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள் அர்ச்சனா குடும்பத்துடன் பேச மொபைல் போன் எதுவும் பயன்படுத்துகிறாரா? என்று சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றனர். ஆனால் அந்த ஆடியோவை நன்றாக கவனிக்கும் பொழுது, “நீ தினமும் வீட்டுக்கு போகணும்னு பேசிகிட்டு இருக்கியே” என்று தான் விசித்ரா கூறி இருக்கிறார். இதுபோல சீசன் நான்கின் போது கமல் எபிசோடில் சோம் சேகர் என்ற போட்டியாளர் அருகில் செல்போன் வைத்து உபயோகித்துக் கொண்டிருந்தது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது..! நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்