பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய கண்ணன்..? இனி இவருக்கு பதில் இவரா.?

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஒருவர் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த புகைப்படம் ஒன்றை அந்த நடிகரே தனது instagram பக்கத்தில் வெளியிட்டிருப்பதால் இது உறுதியான செய்தி தானோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பப்பாங்கான கதையம்சத்துடன், நான்கு அண்ணன் தம்பிகளில் கூட்டுக் குடும்பத்தின் அருமையை விளக்கும் கதையாக இது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியின் ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய கண்ணன்..? இனி இவருக்கு பதில் இவரா.? 1
தற்போது இந்த தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அண்ணன் தம்பிகளின் சண்டையில் ஜீவாவும் மீனாவும், மீனாவின் தந்தை வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். கண்ணனும் ஐஸ்வர்யாவும் தங்களது பாட்டியின் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அண்ணன் தம்பிகள் மீண்டும் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கூட ஜீவா, மூர்த்தி, கண்ணன், கதிர் என அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் மேடையில் நடனமாடும் போன்ற ப்ரோமோவை நாடக குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த சீரியலில் தொடர்ந்து அடுத்தடுத்து கதாபாத்திரங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. முல்லை கதாபாத்திரம் மூன்று முறை மாறி இருக்கிறது் பின்னர் பிரசாந்த் கதாபாத்திரம் மாறி இருக்கிறது. மீனாவின் தங்கை கதாபாத்திரம், ஐஸ்வர்யா கதாபாத்திரம் என்று தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.


அந்த வகையில் தற்போது கண்ணன் கதாபாத்திரமும் மாற இருப்பதாக தெரிகிறது. கண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் விக்ரம் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்த இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு திறப்பு முனையாக அமைந்தது. தற்போது இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவதாக தெரிகிறது. எனவே இவரும் சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருக்குப் பதிலாக தமிழும் சரஸ்வதி சீரியலில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வரும் நவீன் வெற்றி இனி கண்ணனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்து இருக்கிறது. ஐஸ்வர்யாவாக வரும் தீபிகாவும் நவீனும் இணைந்து தங்களது instagram பக்கத்தில் புதிய புகைப்படத்தை ஒன்றை பதிவிட்டு இருக்கின்றனர். அந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர்கள், “விரைவில் சுவாரஸ்யமான ஒன்று வரவிருக்கிறது, காத்திருங்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


இனி நவீன் தான் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சரவணன் விக்ரமும் இது குறித்து எதுவும் அறிவிக்காமல் இருந்து வருகிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்