Categories: சினிமா

நடிகையை மணந்தாரா யோகிபாபு!வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது!!

வெளியிட்டது
நடிகையை மணந்தாரா யோகிபாபு!வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது!! 1

தமிழ் திரையுலகில் ஹீரோக்கள் போல் ஆதிக்கம் செலுத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காமெடி நடிகர்களின் வலம் இருந்து கொண்டே வருகிறது. கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு காலகட்டங்கள் கடந்த தற்போது யோகிபாபு நகைச்சுவையில் சிறந்த காமெடியன் ஆக வலம் வருகிறார்.

அவரை பற்றி தகவல்கள் திடீரென நெட்டில் பரவி வருகிறது. சமீபத்தில் யோகிபாபு நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக கிசுகிசு பரவியதுடன் ஒரு புகைப்படமும் வெளியாகி உள்ளது. அதில் யோகி பாபுடன் நடிகை சபிதாராய் என்பவர் இருக்கிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சபிதாராய் வெளியிட்ட வீடியோவில்,’ யோகிபாபுவுடன் கன்னிராசி என்ற படத்தில் யோகிபாபுவுடன் 2017ம் ஆண்டு நடித்தேன். அப்போது அவருடன் செல்பி படம் எடுத்துக் கொண்டேன். 2 வருஷத்துக்கு பிறகு அதையே யாரோ திருமண படம் என்று கூறி வெளியிட்டு இருக்கிறார்கள். இதுவொரு வதந்தி, அதற்கு இவ்வளவு முக்கியத்துவமா கொடுப்பது? யோகிபாபு என் நண்பர், எனக்கும் யோகிபாபுவுக்கும் திருமணம் நடந்ததாக கூறுவது முழுக்க வதந்தி. இதைய யாரும் தயவுசெய்து நம்ப வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்