லோகேஷுக்கும் திரிஷாவுக்கும் சண்டையா? 3 நாட்களில் ஷூட்டிங்கில் இருந்து சென்னை திரும்பிய திரிஷா.!

வெளியிட்டது

தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து மூன்றே நாட்களில் இருந்து திரும்பிய திரிஷா, அந்த படத்திலிருந்து விலகி விட்டதாக தற்போது இணையத்தில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. அதற்கு பின்னணியில் ஒரு காரணமும் இருக்கிறது. நடிகை திரிஷாவுக்கும், லோகேஷ் கனகராஜுக்கும் பிரச்சினை ஏற்பட்டு திரிஷா படத்தில் இருந்து விலகி விட்டத இன்று காலை முதல் செய்திகள் பரவத் தொடங்கியது. கடந்த வாரம் முழுவதும் சோஷியல் மீடியாவே திணறும் அளவிற்கு தளபதி 67 குறித்த அப்டேட்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. முதல் நாள் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்ட படத்தின் பூஜை நடைபெற்றது. இரண்டாவது நாள் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர் குறித்த தகவல்கள் பகிரப்பட்டது. மூன்றாவது நாள் படத்தின் டைட்டிலை ஒரு ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது படக்குழு. இதனால் விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருந்தனர். ப்ரோமோ வீடியோவை இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்து இருக்கின்றனர்.

லோகேஷுக்கும் திரிஷாவுக்கும் சண்டையா? 3 நாட்களில் ஷூட்டிங்கில் இருந்து சென்னை திரும்பிய திரிஷா.! 1

அனைத்து அப்டேட்டுகளும் வெளியான பின்பு படத்தின் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. இதற்காக படக்குழு காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதன்படியே விமான நிலையத்தில் தளபதி விஜய், நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ் அனைவரும் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் மூன்று நாட்கள் கூட ஆகாத நிலையில் திரிஷா திடீரென மீண்டும் சென்னை திரும்பியிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் பரவத் தொடங்கியதும் லோகேஷ் கனகராஜை அனைவரும் கலாய்க்க தொடங்கியிருந்தனர். அதாவது லோகேஷ் கனகராஜ் படங்களில் இது போல ஹீரோயினை கொலை செய்வது வழக்கமாக இருக்கிறது. விக்ரம் படத்தில் கூட பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த காயத்ரியை தலையை வெட்டி கொலை செய்திருப்பார்கள். அதுபோல த்ரிஷாவையும் மூன்றே நாட்களில் கொலை செய்து விட்டீர்களா? வில்லன் மன்சூர் அலிகான் திரிஷாவின் தலையை வெட்டி எடுத்து வருவது போல ஓபனிங் சீன் இருக்குமோ? என்றெல்லாம் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியிருந்தனர்.


கைதி, மாநகரம், விக்ரம் போன்ற அனைத்து படங்களிலும் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமலேயே படத்தை எடுத்திருக்கிறார்்லோகேஷ் கனகராஜ் .அதுபோல அவர் இயக்கும் படங்களில் பாடல்களும் மிகக் குறைவாக இருக்கும். இதனால் எடுத்த எடுப்பிலேயே ஹீரோயினை கொன்று விட்டீர்களா? என்று மீம்ஸ் போட்டு கலாய்த்திருந்தனர் நெட்டிசன்கள். இந்த நிலையில் சென்னை திரும்பிய உடனேயே தனது ட்விட்டர் பக்கத்தில் லியோ படம் பற்றிய சில ட்வீட்டுகளை மட்டும் வைத்துவிட்டு, தான் பதிவிட்ட பல ட்வீட்டுகளை டெலிட் செய்திருந்தார் திரிஷா. இதனால் த்ரிஷாவிற்கும் லோகேஷ் கனகராஜுக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் திரிஷா படத்திலிருந்து விலகி விட்டதாகவும் அதனால்தான் அவர் காஷ்மீரில் இருந்து மூன்றே நாளில் திரும்பி வந்து விட்டதாகவும் தகவல் தீயாக பரவியது. ஆனால் இது குறித்து விசாரித்து பார்த்தபோது திரிஷா எப்பொழுதும் தான் ட்வீட் செய்ததை சில நாட்களில் டெலிட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதுபோலத்தான் லியோ படம் குறித்த பதிவுகளை நீக்கி இருக்கிறார்.


அவருக்கும் படக்குழுவினருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தேவையில்லாத வதந்திகளை பரப்பாதீர்கள் என்று த்ரிஷாவின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தபோதிலும் தளபதி 67 பட பூஜையில் விஜய் தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பின் செய்து இருக்கிறார் த்ரிஷா. மேலும் கில்லி படத்திற்கு பின்னர் தானும் விஜயும் இணைந்து நடிக்க இருக்கும் சில மீம்ஸ்களையும் அவர் பகிர்ந்து இருப்பதை டெலிட் செய்யாமல் வைத்திருக்கிறார். இதனால் தளபதி 67 படத்தில் இருந்து திரிஷா விலகவில்லை என்பது உறுதியாகிறது. இது வெறும் வதந்தி மட்டுமே என்றும் கூறப்படுகிறது. விஜய்க்கு மட்டும் இது 67வது படம் இல்லை, திரிஷாவிற்கும் 67வது படம் என்பதால் இருவரும் இணைந்து நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்