சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து மாகாபா தற்போது விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் இனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்கிற அடையாளத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். பாட்டு போட்டியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோவிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். எட்டு பருவங்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனில் அடி எடுத்து வைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சூப்பர் சிங்கர் சீனியர் என்று இரண்டு வகையாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி ஷோக்களின் வரிசையில் சூப்பர் சிங்கர் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் முன்னணி பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பது உண்டு.

குறிப்பாக எஸ். பி. பாலசுப்ரமணியம், பி சுசீலா, எஸ் ஜானகி, எல் ஆர் ஈஸ்வரி போன்ற பழம்பெரும் பாடகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்த்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பலமுறை நடுவர்களாகவும் வந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் மாகாபா மற்றும் பிரியங்கா. இதில் மாகாபா ஆனந்த் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா 2015 ஆம் ஆண்டு முதல் தொகுத்து வழங்கி வருகிறார். அதற்கு முன்பாக சிவகார்த்திகேயன், சின்மயி, திவ்யா, பாவனா என்று பலரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர். தற்போது மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் சூப்பர் சிங்கரின் அங்கமாகவே மாறிவிட்டனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மா கா பா ஆனந்த் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மாகாபா ஆனந்த் தற்போது சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்கிற படத்தில் கூட அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கரில் இருந்து மாகாபா விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக ரியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சந்தோஷ் பிரதாப் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். அதில் பிரியங்கா மற்றும் ரியோ ஆகிய இருவருடனும் சந்தோஷ் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.இதனால் இனி மாகாபா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்று வதந்திகள் கிளம்பியது. ஆனால் இது குறித்து மாகாபா ஆனந்த் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோல் விஜய் டிவியும் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகின்றனர்.
இதனால் மாகாபா சூப்பர் சிங்கரில் இருந்து நிரந்தரமாக விலகி விட்டாரா? அல்லது இந்த ஒரு எபிசோடு இருக்க மட்டும் விலகி இருக்கிறாரா என்பது குறித்து தெரியவில்லை. விரைவில் அது குறித்து அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!