சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று தொடர்கள் அடுத்தடுத்த நிறைவடைய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். சின்னத்திரை உலகில் சன் தொலைக்காட்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். 90களில் தொடங்கிய இந்த சின்னத்திரை சகாப்தம் இன்றளவும் நீடித்து வருகிறது. மதியம் ஒளிபரப்பாக தொடங்கும் சீரியல்கள், இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சியாக இருந்து சன் டிவி இருந்து வருகிறது.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘செவ்வந்தி’, ‘மிஸ்டர் மனைவி’, ‘அன்பே வா’ ஆகிய மூன்று தொடர்கள் அடுத்தடுத்து நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு காரணமாக இந்த மூன்று தொடர்களுக்கும் பெரிய அளவில் டிஆர்பி ரேட்டிங் இல்லாததே காரணமாக கூறப்படுகிறது.
இதில் ‘செவ்வந்தி’ சீரியலில் நடிகை திவ்யா ஸ்ரீதர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தபோதும் இந்தத் தொடரில் தொடர்ந்து நடித்து வருகிறார். கைக் குழந்தையுடன் இருக்கும் அவர், தற்போது ஷூட்டிங்கிற்க்கும் சென்று வருகிறார். இதனால் தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்க முடியாத நிலை இருப்பதால் விரைவில் இந்த சீரியலை முடிக்க சீரியல் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல ‘மிஸ்டர் மனைவி’ தொடரில் ‘செம்பருத்தி’ சீரியல் பிரபலம் ஷபானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கும் மிகப்பெரிய மக்களிடையே வரவேற்பு இல்லாததால் இந்த சீரியலையும் முடித்து மூட்டை கட்ட இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து ‘அன்பே வா’ சீரியலும் மிகப்பெரிய அளவில் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்காததால் இந்த சீரியலையும் முடிக்க சன் டிவி திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்தடுத்து மூன்று சீரியல்கள் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், ‘தென்றல்’ தொடரின் மூலமாக அறிமுகமாகி சமீபத்தில் நிறைவடைந்த ‘தாலாட்டு’ சீரியலில் ஹீரோயினாக இருந்த நடிகை ஸ்ருதிராஜ், நடிகர் சஞ்சீவ், ‘திருமதி செல்வம்’ பிரபலம் நடிகை ரிந்தியா ஆகியோர் நடிக்கும் புது சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாக இருக்கிறது. 3 பிரம்மாண்ட சீரியல்களை சன் டிவி அதிரடியாக முடிக்க இருக்கும் தகவலால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.