Categories: சினிமா

பாலாவால் பட வாய்ப்புகளை இழந்த ‘சாட்டை’ பட ஹீரோ.! ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை.!

வெளியிட்டது

பிரபல திரைப்படமாக இருக்கும் ‘சாட்டை’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த நபர் தற்போது பட வாய்ப்புகளை இழந்து பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2002ம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ‘சாட்டை’. இந்த படத்தில் சமுத்திர கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. பள்ளிக்கூடத்தில் நடக்கும் காதலையும், பதின்ம வயதில் மாணவர்களுக்கு ஏற்படும் சலனங்களை திருத்தி, நல்வழிப்படுத்தும் ஆசிரியராக சமுத்திரக்கனியும் நடித்து அசத்தியிருந்தனர். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருந்தது.

பாலாவால் பட வாய்ப்புகளை இழந்த 'சாட்டை' பட ஹீரோ.! ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை.! 1

இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் நடிகர் யுவன். அவர் இந்த படத்திற்கு பின்னர் ‘இளமை’, ‘அய்யனார் வீதி’, ‘கமர்கட்டு’, ‘அடுத்த சாட்டை’ போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. பின்னர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் யுவன் தற்போது ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருவதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரை பேட்டி எடுத்த தனியார் தொலைக்காட்சி உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. அதில் பேசி இருக்கும் அவர், பாலா படத்தில் நடிப்பதற்காக நாகூரில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா போட கற்றுக் கொண்டேன்.


காலையில் பரோட்டா போட தொடங்கினால், மாலை வரை வேலை பார்ப்பேன். பின்னர் மாலை வந்து மீண்டும் இரவு வரை பரோட்டா போடுவேன். இப்படியாக அந்த படத்துக்காக வேலையைக் கற்றுக் கொண்டேன். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் பாலாவின் படம் கைவிடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் கொரோனா வந்த பின்பு, என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாறியது. நான் பாலாவின் படத்திற்காக போட்ட முயற்சி எல்லாம் வெளியில் யாருக்குமே தெரியாது. அந்த படம் கைவிடப்பட்ட செய்தியை அறிந்தபோது தனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அதிலிருந்து மீண்டு வரவே என்னால் முடியவில்லை. அப்போது எனக்கு வயதும் அந்த அளவிற்கு போதவில்லை. நானும் பக்குவப்படவில்லை.


கொரோனாவிற்கு பின்னர் தற்போது நான் ஹோட்டல் ஒன்றை தொடங்கி அதில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். நாகூரில் நான் பெற்ற பயிற்சியைக் கொண்டு தற்போது பரோட்டா போட்டு வருகிறேன்” என்று பேசியிருந்தார். பட வாய்ப்புகள் போனது, கொரோனா காலம் என்று தொடர்ந்து வாய்ப்புகளை தவறவிட்ட அவர் தற்போது ஹோட்டல் ஒன்றை தொடங்கி அதில் தானே பரோட்டா மாஸ்டராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்