தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல நல்லதுகளை செய்து வந்த நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி முழுநேர அரசியல் வாதியாக செயல்பட உள்ளார். விரைவில் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு தேர்தலில் போட்டியிட தளபதி விஜய் தயாராக உள்ளார்.

விரைவில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ள நடிகர் விஜய் அதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். தற்போது முதல்கட்டமாக தனது கட்சிக்கொடியை அண்மையில் அறிமுகம் செய்து வைத்து இருந்தார். வருகிற 27ஆம் தேதி மாநாடுகள் நடைபெற உள்ளது. இதற்கான மாநாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரது தந்தை சந்திரசேகரிடம், விஜய் மாநாடு குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், அதை பற்றி இங்கு பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும், தனியாக ஒரு பேட்டியில் அதை பற்றி கூறுகிறேன் என காட்டமாக பதில் அளித்து உள்ளார். இது கடும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.