தமிழின் முன்னணி வில்லன் நடிகராக இருந்த சாய் தீனா தற்போது தனது குடும்பத்துடன் மதம் மாறி இருக்கிறார். அதற்கு அவர் தற்போது விளக்கம் ஒன்றையும் அளித்திருக்கிறார். ஆரம்பத்தில் வில்லன்களுடன் இருக்கும் அடியாட்கள் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சாய் தீனா. பின்னர் 2004 ஆம் ஆண்டு விருமாண்டி படத்தில் நடித்தார். இவர் இந்த படத்தில் அடியாள் கதாபாத்திரத்தில் தான் முதலில் நடிக்க வந்தார். ஆனால் இவரை கமலஹாசன் ஜெயில் வார்டனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் இவர் இயக்குனர் சங்கரின் எந்திரன், தெறி, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திமிரு புடிச்சவன், மாநகரம், மெர்சல் போன்ற படங்களில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார்.

காதல் படத்தில் நடித்த விருச்சிககாந்த் சென்னையில் உள்ள கோயில்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு பண உதவி செய்வதற்காக தீனா பெரிதும் முயற்சி செய்தார். தீனாவுடன் சேர்ந்து நடிகர்கள் அபி சரவணன் ஆகியோர் சேர்ந்து விருச்சககாந்துக்கு உதவி செய்து வந்தார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் போது அவர் பல குடும்பங்களுக்கு கோதுமை அரிசி உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவினார். 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி உதவி செய்து இருக்கிறார். 30க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தான் ஒவ்வொரு படத்திலும் பெரும் சம்பளத்தில் குறிப்பிடத் தொகையை ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் செலவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். புத்த மதத்துறவியுடன் அவர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவருடைய முடிவுக்கு பலர் ஆதரவும் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது தான் மதம் மாறியது குறித்து விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். தான் ஐந்து வருடங்களுக்கு முன்பே புத்தரை தழுவ ஆரம்பித்துவிட்டேன், தான் பிறப்பால் ஒரு பௌத்தன், என்னுடைய மொத்த குடும்பமும் தற்போது புத்த மதத்திற்கு மாறி இருக்கிறது. இந்தியாவில் 3 மதங்கள் தான் இருக்கிறது என்பது தவறான கருத்து. புத்த மதமும் இருக்கிறது. புத்த மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இல்லை. ஜாதி என்பது ஒரு சாக்கடை, குப்பை என்று அவர் கூறியிருக்கிறார்.
Youtube Video Code Embed Credits: News Tamil 24×7