மாட்டுக்காக மனுசன அடிச்சு கொல்லுவீங்களா? உச்சகட்ட கோபத்தில் சாய்பல்லவி.. தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்கள்

வெளியிட்டது

தமிழின் முண்ணனி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கிலும் கலக்கி வருகிறார். குறிப்பாக தெலுங்கு திரையுலகில் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மேடைகளில் சாய் பல்லவி பேசும் போது கைத்தட்டல்கள் அடங்கவே வெகு நேரம் ஆகும். தற்போது சாய் பல்லவி ராணாவுடன் இணைந்து விராட பர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 17ம் தேதி நாளை வெளியாகிறது. தற்போது சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீரி பண்டிதர்களை கொன்றதையும், தற்போது பசுவுக்காக இசுலாமியர்கள் கொன்றதையும் ஒப்பிட்டு பேசியது தற்போது சர்சைக்குள்ளாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாட்டுக்காக மனுசன அடிச்சு கொல்லுவீங்களா? உச்சகட்ட கோபத்தில் சாய்பல்லவி.. தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்கள் 1

காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன், அதில் காஷ்மீரியை சேர்ந்த இந்து பண்டிதர்களை அங்கு இருந்த இசுலாமியர்கள் கொல்லப்படுவது போன்று காட்டப்பட்டு இருக்கும். இந்த படம் வட இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதை மேற்கோள் காட்டி அந்த படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் எந்த அளவிற்கு தவறோ அதே அளவு பசு மாட்டிற்காக ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி இசுலாமியர் ஒருவரை அடித்து கொலை செய்தது தவறுதான் என்று கூறியுள்ளார். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

என்னை எந்த மதமும் சாராமல் என் பெற்றோர்கள் என்னை வளர்த்துள்ளார்கள், வலதுசாரியோ, இடதுசாரியோ, யார் நல்லவர்கள் என்று நமக்குத் தெரியாது. யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.சிறுபான்மை மக்களை பெரும்பான்மையான மக்கள் துன்புறுத்தக்கூடாது என்றும் கூறினார். சம பல பலத்தில் இருக்கும் இருவர் தான் மோத வேண்டும் என்றும் கூறினார். இந்த பேட்டி வெளியான பிறகு சாய் பல்லவி மீது தொடர்ந்து வன்மத்தை கொட்டி வருகின்றனர். சிலர் சாய் பல்லவிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்களும் தொடுத்து வருகின்றனர். சாய் பல்லவிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Indiaglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்