தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சாய் பல்லவி. நடன கலைஞரான இவர் ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடன போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடி இருக்கிறார். பிறப்பால் தமிழர் என்றாலும் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற படத்தில் தான் அறிமுகமானார். இவர் அந்த படத்தில் மலர் டீச்சர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் வெளியான பிறகு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாயினர். இவர் தமிழில் சில படங்கள் நடித்தார் பிறகு வாய்ப்புகள் குறையவே தெலுங்கு பக்கம் தலை காட்டினார். தெலுங்கில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.

ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற சாய் பல்லவியின் பெயரை நிகழ்ச்சி தொகுப்பாளர் உச்சரித்தபோது, கைதட்டல் அடங்கவே அவ்வளவு நேரம் ஆனது அந்த அளவிற்கு சாய்ப்பல்லவியை உயிராக நினைக்கின்றனர் தெலுங்கு ரசிகர்கள். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார் தற்போது கூட சமீபத்தில் ஷியாம் சிங்கா ராய் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் கார்கி என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
இவர் வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்துள்ளார். இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் புடவையுடனே இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். இதற்கு பின்னால் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் தனக்கு 19 வயது இருக்கும்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டிருந்த போது என்னுடைய துணி சற்று விலகி இருந்தது. நடனம் நன்றாக ஆட வேண்டும் என்பதற்காக அவ்வாறு உடை அணிந்து இருந்தேன். ஆனால் நான் பிரேமம் படத்தில் நடித்து முடித்த போது அந்த வீடியோவை எடுத்து, சில பேர் துணி விலகி இருப்பதாக சுட்டிக் காட்டினர். அது தனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் அது தொடங்கி இன்று முதல் தான் வெளியில் வந்தால் புடவை மட்டுமே அணிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் மார்டன் உடை அணிபவர்கள் கெட்டவர்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.
View Comments
You are a good girl