Categories: சினிமா

குடும்பத்துடன் அருவியில் செம்ம ஜாலியாக ஆட்டம் போட்ட சாய் பல்லவி.!

வெளியிட்டது

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் வெளியான “பிரேமம்” படத்தில் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்தார். பின்னர் மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு சென்று விட்டார். திரும்பி வந்த அவர் திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படம். இந்த படத்தில் மலர் டீச்சராக பலரது உள்ளங்களை கவர்ந்திருப்பார். முதல் படத்திலேயே லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் சாய் பல்லவி. தற்போது அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் அருவியில் செம்ம ஜாலியாக ஆட்டம் போட்ட சாய் பல்லவி.! 1

மலையாளம், தமிழை காட்டிலும் அவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மிக அதிகமாக உள்ளனர். தெலுங்கு படங்களுக்கு ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபடும்போது சாய்பல்லவி என பெயரைச் சொன்னாலே அரங்கம் அதிரும் அளவிற்கு கூச்சலும் கைத்தட்டலும் வானை விஞ்சி விடுகிறது. அந்த அளவிற்கு சாய் பல்லவி மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கின்றனர் தெலுங்கு ரசிகர்கள். சாய்பல்லவி தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த வெளியான படம் “கார்கி”. பெண்களை முதன்மையாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பேன் என்று சாய் பல்லவி கூறி வருகிறார்.

இந்த நிலையில் instagram பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சாய்பல்லவி. அதில் தனது குடும்பத்தினருடன் அவர் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். அங்கே ஓர் அருவியில் அவர் குளித்து ஆட்டம் போடுகிறார். மேலும் அவர் தனது தந்தையுடனும் தாயாருடனும் கேக் வெட்டி சுற்றுலாவை கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சாய் பல்லவி பதிவேற்றி உள்ளார். அந்த வீடியோக்களை சாய் பல்லவி ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்