சீரியலில் தனக்கு மருமகளாக நடித்து வருபவரை மகனுக்கு நிச்சயம் முடித்த மெட்டிஒலி சாந்தி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சக்திவேல்’ தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருக்கும், அதே தொடரில் அவரது மாமியாராக நடித்து வருபவரின் மகனுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நாடகத்தில் மாமியார் மருமகளாக நடித்து வந்த இவர்கள் தற்போது நிஜ வாழ்க்கையிலும் மாமியார் மருமகளாக மாறியுள்ளனர்.

சீரியலில் தனக்கு மருமகளாக நடித்து வருபவரை மகனுக்கு நிச்சயம் முடித்த மெட்டிஒலி சாந்தி.! 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சக்திவேல்’ தொடரில் நடித்து வருபவர் அவள் சந்தியா. பட்டிமன்ற பேச்சாளராக சின்னத்திரைக்குள் நுழைந்து, பின்னர் தொகுப்பாளர், விஜே, நகைச்சுவை பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘கண்மணி’ சீரியல் மூலம் தொடர்களில் நடக்க தொடங்கிய அவர், ‘சத்யா’, ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘நம்ம வீட்டு பொண்ணு’, ‘நளதமயந்தி’ போன்ற பல தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகி இருக்கிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சக்திவேல்  தொடரில் ‘மெட்டிஒலி’ பிரபலமும், நடனக் கலைஞருமான சாந்தியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சந்தியாவுக்கும், சாந்தியின் மகன் முரளி கிருஷ்ணாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் முரளி கிருஷ்ணா வெளியிட்டு இருக்கிறார். தொடரில் மாமியார் மருமகளாக நடித்து வந்த நிலையில், நிஜத்திலும் இவர்கள் உறவினர்களாக மாறி இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்