பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக நுழைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்.! வீடியோ ஆதாரத்துடன் இதோ.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 6 நாளை மறுநாள் மிகப் பிரமாண்டமாக துவங்க உள்ள நிலையில் சீசன் 6-க்காக அமைக்கப்பட்டுள்ள செட்டுகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவி பிரபலம் ஒருவர் பிக்பாஸ் செட்டுக்குள் சென்று எடுத்த புகைப்படங்களை தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தமிழின் ரியாலிட்டி ஷோவில் முதலிடம் வகிப்பது பிக்பாஸ். இது 5 சீசன்களை முடித்து தற்போது ஆறாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இந்த முறையும் பிக்பாஸை கமலஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 4 மற்றும் 5 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே சீசன் 6ஐ மிகப்பெரிய வெற்றியடைய செய்து விட வேண்டும் என்று கணக்குப் போட்டு காய்களை நகர்த்தி வருகிறது பிக் பாஸ் டீம்.

பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக நுழைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்.! வீடியோ ஆதாரத்துடன் இதோ.! 1

அதற்கேற்ப சர்ச்சையான போட்டியாளர்களை உள்ளே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் ரக்ஷன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, விஜே மகேஸ்வரி, வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர், மைனா நந்தினி, விஜே அர்ச்சனா, ரட்சிதா மஹாலெட்சுமி, சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தொகுப்பாளர் டிடி, ஜிபி முத்து, காமெடி நடிகர் மதுரை முத்து போன்றவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே இருக்கிறது. விரைவில் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.


இந்த நிலையில் சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் பிக்பாஸ் செட்டிற்குள் நுழைந்து அங்கு புகைப்படங்களை எடுத்து வந்துள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை விஜய் டிவியின் youtube பக்கங்களில் ஒன்றில் பதிவிட்டுள்ளனர். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Media Masons

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்