ஹைதராபாத்தில் உள்ள கோவில் ஒன்றில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது படத்தின் ப்ரோமோஷன் பணிகளையும் தற்போது தொடங்கி இருக்கிறார் சமந்தா. புராண கதையான சாகுந்தலம் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சமந்தா. சாகுந்தலம் என்னும் காவிய கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கதையில் வரும் சாகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் ஆகிய இருவரும் நடித்திருக்கின்றனர். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சில காலமாக மையோசிட்டிஸ் எனப்படும் தானாக எதிர்ப்பு சக்தி குறையும் நோயால் அவதிப்பட்டு வருகிறார். அடிக்கடி மருத்துவமனையில் அனுமதி பெறும் நடிகை சமந்தா, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சமீப காலமாக உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார். மேலும் உடல்நிலை சரியில்லாத போதிலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டும் இருக்கிறார் சமந்தா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் நடித்திருக்கும் சாகுந்தலம் திரைப்படம் அடிக்கடி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஏங்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக அவர் ப்ரமோஷன் பணிகளை தொடங்கி இருக்கிறார். இன்று ஹைதராபாத்தில் உள்ள பெத்தம்மா கோவிலுக்கு தட்டு தாம்பாளத்துடன் சென்று அவர் அங்கு பூஜை நடத்தி அங்கிருந்து தனது முதல் பிரமோஷனை ஆரம்பித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி இருக்கிறது. முதலில் நவம்பர் மாதம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களால் பிப்ரவரி மாதம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதுவும் மாற்றப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறையாவது நல்லபடியாக படம் வெளியாக வேண்டும் என்று சமந்தா கோவில்களில் பூஜை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்ட அவர் சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனை கோவிலிலிருந்து தொடங்க இருக்கின்றோம். அம்மனின் ஆசிர்வாதங்களுடன் இந்த படம் நன்றாக வரவேண்டும் என்று பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சாகுந்தலம் என்று எழுதப்பட்டிருந்த தட்டில் பூ புடவை வளையலுடன் சமந்தாவும் அவருடன் நடிக்கும் தேவ் மோகனும் கோவிலுக்கு வந்திருந்தனர். சமந்தாவின் இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று சமந்தாவின் ரசிகர்கள் தங்களது பிரார்த்தனைகளையும் வைத்து வருகின்றனர். நீங்களும் சமந்தா வெளியிட்டிருக்கும் வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O