Categories: சினிமா

படம் மரண மாஸா இருக்கு.! லேடி விஜய் மாதிரி இருக்காங்க சமந்தா.! யசோதா படம் பற்றி மக்கள் கருத்து.!

வெளியிட்டது

தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடித்துள்ள யசோதா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே வந்திருக்கிறது. சமந்தா நடிப்பு பற்றியும் அவருடைய சண்டை காட்சிகள் பற்றியும் மக்கள் புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர். வாடகை தாய் முறையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பானா காத்தாடி என்கின்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் அதன் பின்னர் சுமார் 30 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் சாகுந்தலம் என்கிற படத்திலும் குஷி என்கிற இரண்டு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே உள்ளது.

படம் மரண மாஸா இருக்கு.! லேடி விஜய் மாதிரி இருக்காங்க சமந்தா.! யசோதா படம் பற்றி மக்கள் கருத்து.! 1

இந்த நிலையில் இன்று அவர் நடித்துள்ள யசோதா படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் டீசர், ட்ரெய்லர் ஆகிய அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அறிமுக இயக்குனர்கள் ஹரி – ஹரிஷ் என்ற இரண்டு பேரால் இந்த படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி சர்மா ஆகிய பலர் நடித்திருந்தனர். ஆகஸ்ட் 12ஆம் தேதியே வெளியாக வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. மூன்று மாத தாமதத்திற்கு பிறகு இன்று வெளியாகி இருக்கிறது. வாடகை தாய்முறையில் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் எதிர் கொள்ளும் சவால்களை பற்றிய ஒரு படமாக இது இருக்கிறது.


இந்தப் படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீதேவி மூவி சார்பாக சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்திருக்கிறார். இந்த படம் குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் மக்கள் கொடுத்த விமர்சனங்களை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Code Embed Credits: TN 360

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்