Categories: சினிமா

யாரு சொன்னது எனக்கு உடம்பு சரி இல்லனு? ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சமந்தா..!

வெளியிட்டது

தானாக எதிர்ப்பு சக்தியை குறையும் நோய் இருக்கும் போதிலும் சமந்தா தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமந்தா சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். தானாக எதிர்ப்பு சக்தி குறையும் நோயால் அவர் அவதிப்படுகிறார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் இருந்து யசோதா படத்திற்கான டப்பிங் முடித்தார்.

யாரு சொன்னது எனக்கு உடம்பு சரி இல்லனு? ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சமந்தா..! 1

யசோதா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ஜிம் ட்ரெயினருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் தனது ஜிம் ட்ரைனர் தனக்காக எப்போதும் இருக்கிறார். அவர் எந்த நிலையிலும் என்னை கைவிடமாட்டார். யசோதா படத்தில் தான் சிறந்த சண்டை காட்சிகளில் நடித்ததற்காக அவர் எனக்கு ஜிலேபி வழங்கினார். அந்த ஜிலேபிக்கு நான் தகுதியானவரா இல்லையா என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவர் எனக்காக எப்போதும் உறுதுணையாக இருக்கிறார் என்று அவரை கட்டிப்பிடித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மேலும் உடற்பயிற்சி நிலையத்தில் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார்.

தற்போது மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போய் உடல் எடை குறைந்து காணப்படுகிறார் சமந்தா. அதற்காக அவர் மீண்டும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.  இதை பார்த்த பலரும் உடல்நிலை சரியில்லாத போதிலும் இப்படி கடுமையாக உடற்பயிற்சி செய்கிறீர்களே, உங்களுக்கு முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று தங்களது மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றனர் அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்