நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணாக சமந்தா நடித்துள்ளார். திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளது. தமிழில் பானா காத்தாடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இவர் பின்னர் பல படங்களில் நடித்துள்ளார். குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது சமந்தா நடித்த முடித்துள்ள படம் தான் யசோதா. இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கீழே உள்ள ட்ரைலர் வீடியோவை பார்க்கவும்.

யசோதா திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் தொடர்ந்து தாமதமாகி கொண்டே இருந்தது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த இந்தப் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை பட குழு வெளியிட்டு இருந்தது. செப்டம்பர் 9ஆம் தேதி மாலை படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த கதையில், சமந்தா கர்ப்பமான ஒரு பெண்ணாக நடித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் பெண் எதிர்கொள்ளும் சவால்களை பற்றிய ஒரு படம் தான் யசோதா. குறிப்பாக வாடகை தாய் முறையில் பிறக்கும் குழந்தைகள் பற்றிய படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்கு மணி ஷர்மா இசை அமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீதேவி மூவி சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீங்களும் இந்த ட்ரைலரை காண… Watch the below Video..!
Youtube Video Code Embed Credits: Aditya Music Tamil.!