தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கலைஞராக இருக்கிறார் சனம் ஷெட்டி. இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் தற்போது தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். தமிழில் அம்புலி என்கிற திரைப்படம் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் பிக்பாஸில் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் நான்கில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவருக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இருவருக்கும் அடிக்கடி சண்டை பிரச்சனைகள் என நாளுக்கு நாள் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் சனம் செட்டி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த முடிவு மிக தவறானது என்று பிக்பாஸ் ரசிகர்களே சனம்க்கு ஆதரவாக பேச தொடங்கினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சனம் பெங்களூரைச் சேர்ந்தவர், தற்போது தமிழ்நாட்டின், சென்னையில் வசிக்கிறார். இவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சரளமாக பேசக்ககூடியவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ப்ரீத்தி கிச்சன்வேர் நிறுவனத்தின் முகமாக சனம் உள்ளார். மிஸ் தென்னிந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்ட இவர் துவக்கத்தில் இரண்டாம் இடம் பெற்றார், அப்போது முதலிடம் பெற்ற மீரா மிதுனின் மோசடி நடவடிக்கைகள் காரணமாக இவரது பட்டம் இரத்து செய்யப்பட்ட பின்னர், இவர் மிஸ் தென்னிந்தியா 2016 ஆனார். இங்கிலாந்தில் இருந்தபோது, இவர் இலங்கை ஆவணப்படத்தில் நடித்துள்ளார். இவரது வெற்றிகரமான மாடலிங் தொழிலால், இவர் பட வாய்ப்புகளைப் பெற்றார். இறுதியில், நடிப்புத் தொழிலுக்காக சென்னையில் குடியேறினார்.சனமின் முதல் படமாக அம்புலி அமைந்தது. பின்னர் இவர் மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற படத்தில் நடித்தார். சனம் பிக்பாஸ்ஸில் இருந்து வெளியே வந்த பிறகு முந்தைய சீசனில் கலந்து கொண்ட தர்ஷனுக்கும், அவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.
தர்ஷன் சீசன் 3 யில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த சீசனுக்கு செல்லும் முன் அவருக்கும் சனமுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. ஆனால் சீசன் 3 முடிந்து வெளியே வந்த பிறகு தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தற்போது அனைத்து பரபரப்புகளும் ஓய்ந்து, படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் அவருக்கு எதுவும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் அவர் எதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார். தற்போது அவருக்கு பிடித்த பானி பூரி சாப்பிடும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the Below Video.!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O