தமிழ் திரை உலகின் குறிப்பிடத்தகுந்த நடிகையாக இருக்கும் நடிகை சனம் ஷெட்டி திரைத்துறை சரியாக கை கொடுக்காத காரணத்தினால் தற்போது புது தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். திரைத்துறை சார்ந்தே அவர் அந்த புது தொழிலை தொடங்கி இருக்கிறார். அது குறித்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த சனம் ஷெட்டி, மாடலாக தனது வாழ்க்கை தொடங்கியவர். தமிழில் வெளியான ‘அம்புலி’ என்கிற படத்தில் நடித்தது மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பின்பு ‘மாயை’, ‘விலாசம்’, ‘வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்’, ‘தகடு’, ‘சதுரம் 2’ ஆகிய படங்களில் நடித்தார்.

இது மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ‘எதிர்வினை ஆற்று’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இவர் 2020ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ்க்குப் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த இவருக்கு, பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
திரைத்துறை பெரிய அளவில் கை கொடுக்காத காரணத்தினால் தற்போது சனம் ஷெட்டி திரைத்துறை சார்ந்த தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதில் அவர் தயாரிப்பாளராக உருவெடுத்து இருப்பதாக அறிவித்திருக்கிறார். “கிளைம் கல்சர் ப்ரொடக்ஷன்ஸ்” என்கிற நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும், முதலில் ஆல்பங்கள், குறும்படங்கள் தயாரிக்க இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். சனம் ஷெட்டிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். திரைப்படங்களை தயாரிக்காமல் குறும்படங்கள், மியூசிக் ஆல்பங்கள் தயாரிப்பது நல்ல ஐடியா என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Twitter Original Source From: Sanam Shetty