Categories: சினிமா

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதியின் தெறி நடிப்பில் “மைக்கேல்” ட்ரைலர் வெளியானது.!

வெளியிட்டது

நடிகர் சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் மைக்கேல் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சந்திப் கிஷனுடன் இணைந்து விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார். தமிழில் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார். ரஞ்சித் ஜெயக்கொடி என்பவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி ப்ரோடக்ஷன் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கின்றன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதியின் தெறி நடிப்பில் "மைக்கேல்" ட்ரைலர் வெளியானது.! 1

இந்தப் படத்தில் சந்திப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஸ்டைலிஷ் ரெட்ரோ லுக்கில் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஒரு சில நொடிகளே வந்தாலும் விஜய் சேதுபதியின் லுக் மிக மாஸாக இருக்கிறது. காதல் கலந்த அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்ஸ் பேக் கட்டுடலுடன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் சிறந்த ஆக்சன் படமான மைக்கேல் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ட்ரைலரை நீங்களும் காண.. Watch the below video.. 

YouTube Video Code Embed Credits: Aditya Music Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்