விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் முக்கியமான போட்டியாளர்தான் சாண்டி. நடன இயக்குனராக இருந்த இவருக்கு திருப்புமுனையாக அமைந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். சீசன் 3ல் வெற்றி பெற முடியாவிட்டாலும் இரண்டாவது இடத்தைப் பெற்றார். காமெடி திறமை, கவுண்ட்டர் அடிப்பது, நடனம் ஆடுவது, பிறரிடம் அவர் காட்டிய நட்பு என மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார் சாண்டி. கவின் முகேன் லாஸ்லியா ஆகியோருடன் இணைந்து சாண்டி செய்த லூட்டிகள் மறக்க முடியாதவை. வீ ஆர் தி பாய்ஸ் என்ற பாடலை பாடி மற்ற ஹவுஸ்மேட்ஸை எரிச்சல் அடைய செய்வார்கள். இவர்கள் இல்லையென்றால் பிக்பாஸ் சீசன் 3 நன்றாக போய் இருக்காது என்பது உண்மை.

இவர் முதன்முதலில் கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். பின்னர் விஜய் டிவியில் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்து வந்தார். பிறகு கிங் ஆப் டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று உள்ளார். மேலும் இவர் நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த பள்ளியில் ஏழைக்குழந்தைகள் பலருக்கு இலவசமாக நடனம் சொல்லிக் கொடுக்கிறார் சாண்டி. சாண்டி மனைவியின் தங்கை சிந்தியாவும் சாண்டியும் இணைந்து அந்த நடன பள்ளியை நடத்தி வருகின்றனர். சிந்தியாவும் ஒரு நடன கலைஞர் ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் வெளியாகும் வைரல் பாடல்களுக்கு நடனம் அல்லது ரீல்ஸ் செய்வது வழக்கம். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் எப்போதும் வைரலாகி விடும்.
சாண்டியின் குடும்பத்தைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகள் சூசனா, சாண்டி பிக்பாஸில் இருந்தபோது மகளை நினைத்து அழுததும், அந்த குழந்தை உள்ளே சென்றபோது சாண்டி அவரை கட்டியணைத்து அழுததும் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூசனாவை செல்லமாக லாலா என்றே அழைப்பார் சாண்டி. பிக்பாஸுக்குப் பின்னர் சாண்டியின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில்தான் அவருக்கு மகன் பிறந்தான். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் சாண்டி. மேலும் மகனுக்கு பிரபல WWE வீரரான ஷான் மைக்கேல் என்ற பெயரையும் வைத்து இருந்தார்.
தற்போது சாண்டி குடும்பத்தினர் லாலா பாப்பாவின் நான்காவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது மிக குழந்தையாக இருந்தார் லாலா. தற்போது 4 வயதாகிவிட்டது. அவரின் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சாண்டியின் மனைவி சில்வியா. பலரும் லாலாவின் பிறந்த நாளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.