சஞ்சீவின் 34வது பிறந்தநாள்.! வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த ஆலியா மானசா.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

ஆலியா மானசா கணவர் சஞ்சீவின் முப்பத்தி நான்காவது பிறந்தநாள் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது அந்த வீடியோவை சஞ்சீவ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சின்னத்திரை உலகின் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகள். இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற சீரியலில் ஒன்றாக நடித்து வந்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்படவே இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் சஞ்சீவ் இஸ்லாமியர் என்பதால் ஆலியாவின் வீட்டில் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி ஆல்யாவை திருமணம் செய்து கொண்டார் சஞ்சீவ். தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவின் 34வது பிறந்தநாள்.! வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த ஆலியா மானசா.! இதோ வீடியோ.! 1

இந்த தம்பதிகளுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதிகள் குழந்தைகள் செய்யும் சேட்டைகளையும், வெளியில் செல்வது, அவுட்டிங் செல்வது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது, டூர் செல்வது என்று அனைத்தையும் வீடியோக்களாக எடுத்து அதை வெளியிட்டு வருகின்றனர். ஆலியா மானசா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல சஞ்சீவும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருவரும் நடிப்பில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், தற்போது சஞ்சீவிற்கு 34ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோக்களை தற்போது சஞ்சீவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

நேற்று அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தனது மனைவி தனக்கு மகேந்திரா தார் ரக ஜீப் ஒன்றை பரிசாக வழங்கியிருந்ததை குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் ஆலியா மானசா, சஞ்சீவிற்கு வேற லெவலில் சர்ப்ரைஸ் செய்திருக்கிறார். இந்த பிறந்தநாள் பார்டியில் விஜய் டிவி பிரபலங்கள் சித்து, ஸ்ரேயா உள்ளிட்டோருடன் சன் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது நான் ரெடி தான் வரவா பாடலுக்கு அவர் மனைவியுடன் இணைந்து நடனமாடியும் பின்னர் கேக் வெட்டியும் இருக்கிறார். அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்