ராதிகா சரத்குமார் இயக்கி வரும் புதிய தொடரான “கிழக்கு வாசல்” தொடரிலிருந்து தற்போது அதன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த சஞ்சீவ் விலகி இருக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்கு பதிலாக புதிதாக யார் ஹீரோவாக நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. என்பது மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். நடிகர் எம் ஆர் ராதாவின் மகளாக இருந்த இவர் நடிப்பது மட்டுமல்லாமல் ரேடான் மீடியா என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் உருவாக்கி அதன் மூலமாக பல சீரியல்களை தயாரித்திருக்கிறார். மேலும் அந்த சீரியல்களில் அவரே நடித்து சின்னத்திரை ரசிகர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். அந்த வகையில் சித்தி, வாணி ராணி, அண்ணாமலை, அரசி போன்ற பல சீரியல்களை அவர் தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் சன் தொலைக்காட்சிகளில் இருந்து விலகி தற்போது முதல் முறையாக விஜய் தொலைக்காட்சிக்கு சென்றிருக்கிறார் ராதிகா. புதிய நாடகம் ஒன்றை எஸ்ஏ சந்திரசேகர், சஞ்சீவ், ரேஷ்மா உள்ளிட்ட பலருடன் இணைந்து தயாரிக்கிறார்.

விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ராதிகாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் சஞ்சீவ் கதாநாயகியாகவும், நடிகை ரேஷ்மா கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நாடகத்திற்கு “கிழக்கு வாசல்” என்று பெயரிடப்பட்டிருந்தது. மேலும் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையை மையமாகக் கொண்டு இந்த நாடகம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான படங்களில் நடித்தவரும் ,நடிகர் விஜய்யின் நண்பராக பல படங்களில் துணை வேடங்களில் நடித்தவரும் ஆன நடிகர் சஞ்சீவ் இந்த சீரியலின் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானார் சஞ்சீவ். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு சீரியல் என்று சொன்னால் அது திருமதி செல்வம் தான். 2007 முதல் 2013 வரை சுமார் ஆறு ஆண்டுகள் ஒளிபரப்பாகிய இந்த நாடகத்தில் செல்வம் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் சஞ்சீவ்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து போகவே அவர் பிக்பாஸிலும் கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசன் 5 ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் சஞ்சீவ். ஆனால் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்க்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது சில நாடகங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது கிழக்கு வாசல் தொடரில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் பட பூஜைகள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. தற்போது அவர் சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாடகம் ஒளிபரப்பாவதற்கு முன்பே சீரியலில் இருந்து ஹீரோவே விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சஞ்சீவ் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.