Categories: சினிமா

துப்பறியும் சாம்புவாக மாறிய சந்தானம்.! ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ட்ரைலர் வெளியானது.!

வெளியிட்டது

நடிகர் சந்தானம் நடித்துள்ள “ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் தனது வாழ்க்கை தொடங்கி, இன்று தமிழின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். பிறகு காமெடியை கைவிட்டு விட்டேன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோவாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருக்கிறார் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் குழு குழு. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது துப்பறியும் நபராக சந்தானம் நடித்துள்ள படம் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ட்ரெய்லர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துப்பறியும் சாம்புவாக மாறிய சந்தானம்.! ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1

ஸ்ரீ ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்கிற கன்னட படத்தின் ரீமேக் தான் தற்போது சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம். இந்த படம் கன்னடத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதால், அந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்து இருக்கின்றனர். இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், ரெடிங் கிங்ஸ்லி, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை லேப்ரின்த் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படத்திற்கு தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

துப்பறியும் ஏஜென்ட் போல டிடெக்டிவ் ஆக மாறி சந்தானம் செய்து வரும் நிகழ்வுகளை தற்போது ட்ரெய்லராக வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரை நீங்களும் காண..! Watch the below Video..!

 

Youtube Video Code Embed Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்