Categories: சினிமா

சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் எப்படி இருக்கு.? பொதுமக்கள் கருத்து

வெளியிட்டது

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் பற்றி தற்போது மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். விஜய் டிவியில் தனது வாழ்க்கை தொடங்கி, இன்று தமிழின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். “ஸ்ரீ ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா” என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இந்த படம். இந்த படம் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதால், அந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்து இருக்கின்றனர். இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், ரெடிங் கிங்ஸ்லி, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் எப்படி இருக்கு.? பொதுமக்கள் கருத்து 1

இந்த படத்தை லேப்ரின்த் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படத்திற்கு தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். துப்பறியும் ஏஜென்ட் போல டிடெக்டிவ் ஆக மாறி சந்தானம் செய்து வரும் நிகழ்வுகளை காமெடி ஜானரில் உருவாக்கி இருந்தனர். தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்ததால் தமிழில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. குறிப்பாக சந்தானம் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஆகியோர் இணைந்து இருந்ததால் ரசிகர்களிடையே ஆவல் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் இன்று படம் வெளியான நிலையில், மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்தானத்திற்க்காக படம் பார்க்க வந்ததாகவும் ஆனால் படம் சுத்தமாக நன்றாக இல்லை என்றும் காமெடி எல்லாம் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் மக்கள் சொன்ன கருத்துக்களை காண.! Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Chennai Waalaa

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்