Categories: சினிமா

படம் வேற லெவல் காமெடியா இருக்கு.! சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை புகழ்ந்து தள்ளிய மக்கள்.!

வெளியிட்டது

நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் டிடி ரிட்டன்ர்ஸ் திரைப்படம் பற்றி தற்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். பலரும் இந்த படம் சந்தானத்திற்கு ஒரு பெரிய கம் பேக் கொடுத்திருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். படம் பார்த்து விட்டு வெளியே வந்த பலரும் படம் மிக நன்றாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி இன்றைக்கு தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். இவர் சமீப காலமாக காமெடி ஜானரை கைவிட்டு ஹீரோவாக நடித்தார். இந்த நிலையில் மீண்டும் காமெடி ஜானருக்கே திரும்பி இருக்கிறார். அவர் நடிப்பில் இன்று டிடி ரிட்டன்ர்ஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பணத்திற்காக ஆசைப்பட்டு பேய் பங்களாவிற்குள் மாட்டிக்கொள்ளும் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் வேற லெவல் காமெடியா இருக்கு.! சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை புகழ்ந்து தள்ளிய மக்கள்.! 1

தற்போது கைவசம் டிடி ரிட்டன்ர்ஸ், கிக், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடிகை சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராபர்ட், மொட்ட ராஜேந்திரன், முனீஷ்காந்த், தீனா, தங்கதுரை, தீபா சங்கர் போன்றோர் நடித்திருக்கின்றனர். எஸ் பிரேம் ஆனந்த் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஆர் கே என்டர்டைன்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். பணத்திற்காக ஆசைப்பட்டு பேய் பங்களாவிற்குள் நுழையும் சந்தானம் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு பேய்களிடம் மாட்டிக் கொள்கின்றனர்.

அவர்களுக்கு பேய்கள் ஒரு விளையாட்டை நடத்துகின்றனர். அந்த விளையாட்டில் ஜெயித்து மீண்டும் உயிருடன் வெளியே வந்தார்களா? என்று கதை நகர்கிறது. அந்த படம் குறித்து தற்போது பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பலரும் படம் மிக நன்றாக இருந்ததாகவும் இது சந்தானத்திற்கு கண்டிப்பாக ஒரு கம் பேக்காக இருந்தாகவும் கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Shruthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்