திரைத்துறையில் எனக்கு கிடைத்த தங்கை நயன்தாரா.! நெகிழ்ந்து போய் பேசிய சந்தானம்.!

வெளியிட்டது

நடிகர் சந்தானம் தற்போது ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நயன்தாராவிற்கும் தனக்கும் உள்ள உறவானது அண்ணன் தங்கை உறவு. அவர் எப்பொழுதும் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார். அவரை நான் தங்கையாக பார்க்கிறேன். மேலும் நயன்தாராவின் குழந்தைகளுக்கு என் மடியில் வைத்து தான் காது குத்து நடக்கும் என்று கலகலப்பாக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைத்துறையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று நாயகனாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவர்தான் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் தற்போது சக்கை போடு போட்டு வருகிறது. பலரும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வந்த நிலையில் வசூலையும் வாரி குவித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.! 

திரைத்துறையில் எனக்கு கிடைத்த தங்கை நயன்தாரா.! நெகிழ்ந்து போய் பேசிய சந்தானம்.! 1

இந்த நிலையில் ஊடகம் ஒன்றில் நயன்தாராவுடனான நட்பு குறித்து கேட்கப்பட்ட நிலையில் வல்லவன் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதில் இருந்தே தனக்கு நயன்தாராவை நன்றாக தெரியும், அவர் எப்பொழுதும் என்னை பாசமாக அண்ணன் என்று அழைப்பார், எனக்கு திரைத்துறையில் கிடைத்த தங்கை தான் நயன்தாரா என்றும் மகிழ்ச்சியுடன் பேசினார். மேலும் அஜித் நடிக்கும் ஒரு படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தபோது தனக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்ததால், அவர் வீட்டிற்கு அது குறித்து பேச சென்றபோது தடபுடலாக தனக்கு விருந்து வைத்தனர். மேலும் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த போது நான் நேரில் சென்று பார்த்தேன். அப்பொழுது நயன்தாரா குழந்தைகளிடம் மாமாவை பாரு என்று கூறினார். அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாகவும் சந்தானம் கூறினார்.

அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் நீங்கள் தாய்மாமன் என்றால் உங்கள் மடியில் வைத்து தான் காது குத்துவார்களா? நீங்கள் தாய்மாமன் சீர் செய்வீர்களா என்று காமெடியாக கேட்க சிரித்துக்கொண்டே ஆமாம் கண்டிப்பாக என்று பதிலளித்தார் சந்தானம். அவரின் அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்தின் கம் பேக்காக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் இருக்கிறது. தற்போது இரண்டு நாட்களில் பல கோடி ரூபாய்களை அள்ளி பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. தொடர்ந்து இதேபோல சந்தானம் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது வேண்டுகோளை அவருக்கு விடுத்து வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்