தமிழ் சினிமாவில் வெற்றிக்காக போராடும் நடிகர்களில் ஒருவர் தான் சாந்தனு. இயக்குனர் பாக்யராஜின் மகன் என்பதால் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார். பின்னர் சக்கரக்கட்டி படத்தில் நடித்து கதாநாயகனாக சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். வரிசையாக பல படங்கள் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த படத்திலும் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக போராடி வருகிறார் சாந்தனு.

இவர் அண்மையில் நடித்த ப்ளூ ஸ்டார் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்தப்படத்திற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார் சாந்தனு. இவர் தொகுப்பாளினி கிகியை காதலித்து திருமணம் செய்துகொண்டு உள்ளார். மேலும் மனைவியுடன் சேர்ந்து சொந்தமாக டான்ஸ் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.
தற்போது இவர் மனைவி கிகி உடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை கிகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.