சரத்குமார் ராதிகா தம்பதிகள் தங்களது 22 ஆவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். அதற்காக சரத்குமார் தனது மனைவிக்கு ஒரு அழகிய கவிதை ஒன்று எழுதி அழகிய வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நடிகர் சரத்குமார் தமிழ் குடும்பத்தில் டெல்லியில் பிறந்தார். இவர் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டம் ஆகும். பின்னர் சென்னைக்கு வந்த இவர் சென்னையில் தான் வளர்ந்தார். அங்கு கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். சரத்குமார் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே சாயா தேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சாயா தேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடல் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது ராடான் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. 2001 ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் ராதிகாவிற்கும் சரத்குமாருக்கும் ராகுல் என்கிற ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் ராதிகா சரத்குமார் குடும்பம் தற்போது சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு பிடித்த ஒரு குடும்பமாக இருந்து வருகிறார்கள். இவர்கள் எது செய்தாலும் அது இணையத்தில் வேகமாக பரவி விடுகிறது. குறிப்பாக ராதிகா தனது பேரக் குழந்தைகளுடன் இணைந்து செய்யும் சேட்டைகள் இணையத்தில் பெருமளவில் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. ராதிகாவிற்கு முதலில் பிரதாப் போத்தனனுடன் திருமணமானது. பின்னர் இங்கிலாந்து சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆனது அவருக்கும் ராதிகாவிற்கும் பிறந்த குழந்தைதான் ரயான். ரயானுக்கு தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த குழந்தைகளுடன் விளையாடும் வீடியோக்களை தான் ராதிகா அவ்வபோது தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் சரத்குமார் உடன் திருமணம் ஆகி 22 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதற்காக தனது மனைவி ராதிகாவிற்கு ஒரு கவிதை ஒன்றை எழுதி ஒரு அழகிய வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார் சரத்குமார்.
அதில் அவர், 22 வருடங்கள், இது எங்கள் வாழ்வின் நீண்ட பேரின்பப் பயணம், அன்பின் பயணம், புரிதலின் பயணம், தியாகங்களின் பயணம், ஒற்றுமையின் பயணம். இந்த மகிழ்ச்சியான பயணம் இதுவரை வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும், புயல்களையும் கண்டது, ஆனால் நம் விதியின் அடிமைத்தனம் அனைத்தையும் ஒன்றாக வைத்திருந்தது புரிதல், தியாகம் மற்றும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிந்ததற்கு நன்றி. இந்த நாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன், அவர் நம்மை எப்போதும் ஒன்றாக வைத்திருப்பார், வரவிருக்கும் எதிர்கால ஆண்டுகளில் நம்முடைய அழகான குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்க வேண்டும், என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Video Below..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O