“ஒரு Gang பத்தி நான் பேச விரும்பல”.! மாயாவை மறைமுகமாக சாடிய பிக்பாஸ் சரவண விக்ரம்..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் போட்டியாளராக இருந்த சரவணன் விக்ரம் தற்போது முதல் முறையாக லைவுக்கு வந்திருக்கிறார். இந்த பேட்டியில் அவர் பிக் பாஸ் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவர், “உள்ளே இருந்ததை வைத்து பார்த்தால் விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா ஆகிய மூன்று பேரும் உண்மையானவர்கள் கிடையாது. ஆனால் அதில் அர்ச்சனாவிடம் எனக்கு கடைசி வாரம் நல்ல பிணைப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்குள் வெளியே வரும்படி ஆகிவிட்டது. உள்ளே இருந்தபோது நான் ஒரு குரூப்பை நம்பி ஏமாந்து விட்டேன். அவர்கள் பற்றிய சரியான புரிதல் இல்லை. அதனால் அவர்கள் பற்றி நான் பேசக்கூடாது. அவர்கள் வெளியே வந்த பின்னர் தெளிவு ஏற்படுத்திக் கொண்டு விட்டு அவர்கள் குறித்து தெளிவாக பேசுகிறேன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.! 

"ஒரு Gang பத்தி நான் பேச விரும்பல".! மாயாவை மறைமுகமாக சாடிய பிக்பாஸ் சரவண விக்ரம்..! 1
பிக் பாஸை பொருத்தவரை விஜய் வர்மா மற்றும் விசித்ரா இருவருமே மிக பலமான போட்டியாளர்கள். இதில் விஜய் வர்மா, தினேஷ், அர்ச்சனா, மணி ஆகிய நால்வரும் இறுதிப் மேடை வரை வருவார்கள். மாயா, பூர்ணிமா, நிக்சன் இவர்கள் மூவரில் இருந்து ஒருவர் கண்டிப்பாக முதல் ஐந்து இடங்களை பிடிப்பார்கள். மேலும் நான் இரவு பேசிய விஷயங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் வராது என்று நினைத்து பேசினேன். ஹரிஷ் கல்யாண் வந்து சொன்ன பிறகுதான் எனக்கு அது வெளியில் வருவது தெரிந்தது. பின்னர் அது ட்ரோலாக மாறிக்கொண்டிருப்பதும் எனக்கு புரிய வந்தது. நான் எப்பொழுதுமே ஒரு விஷயத்தை மைண்டில் இலக்கை வைத்துக் கொண்டு அதை நோக்கி பயணிப்பேன். அதுபோலத்தான் டைட்டில் வின்னர் என்கிற இலக்கை நான் முதலில் என் மனதில் நிர்ணயித்துக் கொண்டேன்.


பின்னர் அந்த இலக்கை நோக்கி ஓடத் தொடங்கினேன். அது நல்ல விஷயம்தான். தற்போது என் நண்பர்கள் கூட அது போல ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டு அதை நோக்கி ஓடத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் நான் செல்லும் இடங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நான் டைட்டில் வின்னர் ஆகாவிட்டாலும் இதனால் தனக்கு டைட்டில் வின்னர் சரவணன் விக்ரம் என்று அனைவரும் அழைக்கின்றனர். நான் ஒரு மாலுக்கு சென்றிருந்தேன். அங்கு வந்து ஒருவர் என் கையைத் தூக்கி உண்மையான டைட்டில் வின்னர் நீங்கள்தான் என்று கூறினார். அதுவே தனக்கு பெருமையாக இருந்தது. அதேபோல அக்ஷயா, ஜோவிகா இருவர் மட்டுமே எனக்கு நல்ல நண்பர்களாக இருந்தனர்.

பிடிக்காதவர்கள்/எதிரிகள் என எனக்கு யாரும் கிடையாது. டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் இல்லாமல் போய் விட்டோமே என்பதற்காக நான் எபிசோடுகளையே பார்ப்பதில்லை அடுத்த பிளான் படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். மக்களுடைய வரவேற்பு மிகுந்த பாசிட்டிவாக இருக்கிறது. நான் மிகுந்த மனவேதனையிலிருந்தேன். ஆனால் அவர்கள் என எனக்கு கொடுத்து வரும் பாசிட்டிவ் கமெண்ட்கள் மற்றும் மெசேஜ்கள் என்னை இரண்டு நாளில் மீண்டு வர வைத்து விட்டன. மக்களின் பாசிட்டிவ் கமெண்ட்டுகள் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு சக்தி படைத்தவை. மன அழுத்தத்தில் இருந்த என்னை இரண்டு நாட்களில் மீட்டுக் கொண்டு வந்து விட்டனர்” என்று அவர் பேசினார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்