என் அம்மா கையால சாப்பிட முடியல.! கோமாவில் இருக்கும் தாயை நினைத்து கலங்கிய மகன்.!

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது தாய்க்காக தர்ஷன் பாடிய பாடல் பலரின் மனங்களை கரைத்து இருந்தது தற்போது. தற்போது தர்ஷன் சரிகமப சீனியரில் கலந்து கொண்டு சியாமளா உடன் இணைந்து மலரே மௌனமா என்கிற பாடலை பாடியிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாடலை பாடிய பின்பு சியாமளா தர்ஷனை பார்த்தால் எனக்கு மகன் போல தோன்றுகிறது என்று சொல்லி அவருக்கு பிடித்த உணவு ஒன்றை சமைத்து எடுத்துக் கொண்டு வந்து ஊட்டி இருக்கிறார். அந்த ப்ரோமோவை பார்த்த பலரும் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை போல ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி தான் சரிகமப. சீனியரில் மூன்று சீசன்களையும், ஜூனியரில் இரண்டு சீசனையும் முடித்து, தற்போது ஜூனியரில் மூன்றாவது சீசனை நடத்தி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் அம்மா கையால சாப்பிட முடியல.! கோமாவில் இருக்கும் தாயை நினைத்து கலங்கிய மகன்.! 1

இந்த அனைத்து சீசன்களையும் அர்ச்சனாவே தொகுத்து வழங்கி வர, தற்போது நடிகை அபிராமி, பாடகி சைந்தவி, பாடகர்கள் கார்த்திக், ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீசன் மூன்றில் தர்ஷன் என்கிற பெங்களூருவை சேர்ந்த சிறுவன் ராம் படத்தில் வரும் ஆராரிராரோ என்கிற பாடலை மிக உருக்கமாக பாடியிருந்தான். அந்தப் பின்னணி குறித்து கேட்டபோது ஜீ தமிழ் மேடையில் பாட வேண்டும் என்பது தனது தாயின் நீண்ட நாள் கனவு, ஆனால் தற்போது அவர் ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருக்கிறார், அவரால் தான் இங்கு இருப்பதை பார்க்க முடியவில்லை என்று கண் கலங்கி பேசியிருந்தார்.்அந்த காணொளியை பார்த்த பலரும் கண் கலங்கி அழுது இருந்தனர். பலரும் தர்ஷனுக்கு தங்களது ஆறுதல்களை கூறினர். மேடையில் இருந்த அனைத்து தாய்மார்களும் எழுந்து சென்று தர்ஷனை ஆறுதல் படுத்தி தேற்றினர்.


இந்த நிலையில் தற்போது ஒரு புது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சீனியருடன் இணைந்து மலரே மௌனமா என்கிற பாடலை பாடிக் கொண்டிருக்கிறார் தர்ஷன். முந்தைய சீசனில் போட்டியாளராக இருந்த சியாமளா உடன் இணைந்து அவர் இந்த பாடலை பாடினார். நடுவர்கள் பலரும் நாங்கள் பார்த்ததிலேயே இது பெஸ்ட் பர்பாமன்ஸ் என்று பாராட்டினர். பாடி முடித்த பின்னர் சியாமளா தர்ஷினைப் பார்க்கும் பொழுது தனக்கு தன்னுடைய மகன் ஞாபகம் வருவதாக கூறி அவருக்கு பிடித்த சிக்கன் பிரியாணி செய்து வந்துள்ளதாக கூறி அவருக்கு அதை ஊட்டியும் விடுகிறார். இதனால் கண்கலங்கும் தர்ஷன் அதை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்