அபிராமி, சைந்தவி உட்பட நடுவர்கள் அனைவரையும் அழ வைத்த சிறுவன்.! நெகிழ்ச்சியான ப்ரோமோ.!

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தற்போது நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மதம் மாறி திருமணம் செய்ததால் 17 ஆண்டுகளாக தனது பெற்றோர்கள் தன்னிடம் பேசுவதில்லை என்று சொல்லி போட்டியாளரின் தாயார் ஒருவர் கண்கலங்கி அழுதிருக்கிறார். அதை பார்த்த நிகழ்ச்சியின் நடுவர்கள் அனைவரும் கண்கலங்கி அழுது இருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியை போலவே தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சரிகமப என்கிற நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. சீனியரில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்த அந்த நிகழ்ச்சி தற்போது ஜூனியரிலும் மூன்றாவது சீசனை நடத்தி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபிராமி, சைந்தவி உட்பட நடுவர்கள் அனைவரையும் அழ வைத்த சிறுவன்.! நெகிழ்ச்சியான ப்ரோமோ.! 1

இந்த நிகழ்ச்சியில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்து வருகிறது. மொழி தெரியாத குழந்தைகள் தொடங்கி, இலங்கை குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தையான பிரியன் உள்ளிட்டோரும் இந்த சீசனில் பங்கெடுத்து வருகின்றனர். மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியைக் காட்டிலும் திறமையான போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி டாப் ஹிட் தொடராக சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் இடம் பிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல நெகிழ்ச்சியான பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கனிஷ்கர் என்ற சிறுவனின் தாயார் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் கேட்ட பலரும் கண் கலங்கி அழுதிருக்கின்றனர்.

காதல் திருமணம் செய்ததால் தன்னுடைய தாயார் 17 வருடமாக என்னிடம் பேசவில்லை, என் குழந்தைகளுக்கு நான் மதத்தை கற்றுக் கொடுக்காமல் வளர்த்திருக்கிறேன் என்று சொல்லி கண்கலங்கி அழுதார். அதை பார்த்த அபிராமி, சைந்தவி உள்ளிட்டோர்களும் கண்கலங்கினர். அப்போது பேசிய சிறுவன் கனிஷ்கர் தனது அம்மம்மாவை பார்க்க வேண்டும், அவர்களைப் பார்த்தால் கட்டி பிடித்து முத்தம் தர வேண்டும் என்று கண் கலங்கி பேசினார். அதை பார்த்த பின்பு நடுவர்கள் உட்பட அனைவரும் கண்கலங்கினர். அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்