Categories: சினிமா

உண்மையான மிருகமாக மாறிய சசிகுமார்.! நான் மிருகமாய் மாற படத்தின் ட்ரைலர் வெளியானது.!

வெளியிட்டது

இயக்குனராக இருந்து நடிகராக மாறி இருக்கும் சசிகுமார் நடித்துள்ள “நான் மிருகமாய் மாற” படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனராக அறிமுகம் ஆகி பின்னாளில் நடிப்பின் மீது வந்த ஆர்வத்தின் காரணமாக நடிக்க வந்தவர் சசிகுமார். ஆரம்பத்தில் பாலா, அமீர் ஆகியோருடன் உதவியாளராக பணியாற்றி வந்தார் சசிகுமார். மௌனம் பேசியதே, ராம் போன்ற படங்களில் இயக்குனர் அமீருக்கு உதவியாக இருந்தார். 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் குறிப்பிட்ட படங்களாக நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை போன்றவை உள்ளன. டிரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையான மிருகமாக மாறிய சசிகுமார்.! நான் மிருகமாய் மாற படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1

சில காலமாக நடிக்காமல் இருந்து வந்த சசிகுமார் தற்போது நான் மிருகமாய் மாற என்ற படத்தில் நடித்திருக்கிறார். கழுகு, கழுகு 2 போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சத்திய சிவா இயக்கத்தில் இந்த படத்தில் நடித்த முடித்திருக்கிறார் சசிகுமார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு காமன் மேன் என்று பெயரிடப்பட்டிருந்தது. காப்பி ரைட் பிரச்சினை காரணமாக நான் மிருகமாய் மாற என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து விக்ராந்த், ஹரிப்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

கருப்பு வெள்ளை நிறத்தில் மொத்த ட்ரைலரும் வெளியாகி இருக்கிறது. 100 கோடி மனிதனுக்கு ஆயிரம் கோடி ஆசை, எளியோரை வலியோர் வாட்டினால், வலியோரை எளியோர் வாட்டும், இதை சொன்னவன் மட்டும் என் கையில் கிடைச்சான் என்ற வசனங்கள் எல்லாம் அனல் தெறிக்கும் விதத்தில் இருக்கிறது. கொலை, கொள்ளை, ரத்தம் பழி தீர்த்தல் என்று இந்த ட்ரெய்லர் மிக பயங்கரமாக வெளியாகி இருக்கிறது. படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் டீசரை நீங்களும் காண.. Watch the below video..!

Youtube video code embed credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்