“வயசானா லவ் பண்ண கூடாது’ல……சட்டமே இருக்கு – பாக்கியலட்சுமி சதிஷ்”!!

வெளியிட்டது

பாக்கியாவை திருமணமாகி, தன்னுடைய மூத்த மகனுக்கும் திருமணமான நிலையிலும் கோபி தன்னுடைய பழைய காதலை மறவாமல் இருக்கிறான். கல்லுரியில் உடன் படித்த   ராதிகாவை காதலித்து இருக்கிறான். இப்பொது அவளுக்கும் திருமணமாகி விவாகரத்து ஆனா நிலையில் மீண்டும் ஆவலுடன் சேர்ந்து வாழ ஆசை படுகிறான் கோபி.

"வயசானா லவ் பண்ண கூடாது'ல......சட்டமே இருக்கு - பாக்கியலட்சுமி சதிஷ்"!! 1

சில நாட்கள் முன் வரும் குன்னக்குடி உறவினர்கள் இந்த விஷயத்தை அறிந்து, ராதிகாவின் குழந்தையின் டீச்சரானா பாக்கியாவிடம் இந்த விஷயங்களை கூற முடியாமல், ராதிகாவிடம் கூறிவிட்டு சென்றுவிடுகிறார்கள். விஷயம் அறிய ராதிகா பாக்கியாவிற்கு துரோகம் செய்ய முடியாமல், கோபியை ஒதுக்குகிறாள். அப்போது கோபம் முறும் கோபி, ராதிகாவின் முன்னாள் கணவன் ராஜேஷை அடித்துவிடுகிறான்.

அதே நேரம் ராதிகா பாக்கியாவிடம் தான் இந்த ஊரை விட்டுவிட்டு, மும்பை போக போவதாக கூறுகிறாள். ராதிகாவிற்கு மட்டுமே தெரியும் கோபி தான் பாகியாவின் கானவன் என்று. பாகியாவிற்கு தன கானவன் பழகி கொண்டிருக்கும் பெண் ராதிகா என தெரிவதில்லை. கோபத்தில் ராஜேஷ் நேராக கோபி வீட்டிற்கு உண்மைகளை கூறி விடுகிறான். அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி, உடனே கோபியை வீட்டிற்கு அழைக்க, பதட்டத்தில் கோபி விபத்தில் சிக்குகிறான்.

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் கோபியை பார்க்க பாக்கியாவும், ராதிகாவும் ஒரே நேரத்தில் வந்தாலும் தள்ளி தள்ளி அமருவதால் பார்த்துக்கொள்ள முடிவதில்லை. ஆனால் நர்ஸ் யாரு கோபியோட மனைவி என கூப்பிட, ராதிகா எழுத்து சென்று “நான்தான்” என சென்று கை எழுத்து போடுகிறாள். அந்த இருக்கும் பாக்கிய இதனை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறாள். உள்ளே சென்றுள்ள ராதிகாவின் கையை பிடித்துக்கொண்டு கோபி, “நீ இல்லாம ந செத்துருவேன்” என கெஞ்சுகிறான். கதவு அருகில் இருந்து இது அனைத்தையும் பார்த்து செய்வது அறியாமல் தவிக்கிறாள் பாக்கிய. தனக்கு துரோகம் செய்துள்ளது, ராதிகா தான் எனவும், துரோகம் செய்யும் கணவனை நினைத்து அதிர்ச்சியில் செய்வது அறியாமல் தவிக்கிறாள்.

தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவரும் கோபியை கோபம் தலைக்கேறி பொய் பாக்கியா வீட்டினர் முன்பு வைத்து, “உங்களுக்கு ஆஸ்பத்திரில பொண்டாட்டின்னு கையெழுத்து போட்டது….கைய புடிச்சிட்டு அழுதது…..காசு கட்டுனதுலாம் யாரு’னு நீங்க சொல்றேங்கலா…இல்ல நானே சொல்லவா…என கேட்க கோபி தயங்கி கொண்டு நிற்கிறான். பாக்கியாவே கடுப்பில் அது ராதிகா தான் என உண்மையை குடும்பத்தினர் முன்பு போடு உடைகிறாள். இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைகிறார்கள்.இவ்வாறாக இந்த தொடர் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த தொடரின் மூலம் மக்களிடமே மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் சதிஷ் என்கிற பாக்கியலட்சுமி கோபி. இவரை சதிஷ்ஷாக மக்களுக்கு தெரிந்தது விட கோபியாகவே மிகவும் பரிட்சயம். கள்ளக்காதல் தொடர்பில் இருக்கும் கோபியின் வாழ்க்கை மிக பெரிய அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தேறி வருகிறது. பல திருப்பங்களுடன் இந்த தொடர் தான் இப்பொது மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் தொடராக உள்ளது.

இப்பொது இவர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் எங்களுக்கு கொடுத்துள்ள மிக பெரிய வரவேற்புக்கு நன்றி, கோபி அடுத்தடுத்த பிரச்சைனைகளில் இனிமே மட்ட இருக்கான், குற்றவாளியான அவனுக்கு என தீர்ப்பு கொடுக்கப்போறாங்க நீங்களே பாருங்க, என்னத்தான் இருந்தாலும் வயசான காலத்துல லவ் பண்றது தப்புங்க, நான் ரொம்ப சாதாரணமான மனுஷன்…இது தப்பு” என கூறியுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்