Categories: சினிமா

Rajinikanth உடல்நலம் குறித்து பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் Sathyaraj..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உலக சினிமா வரை உள்ளது. ஜப்பானில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தை பார்த்து அவர் போல ஆட்டோ ஒட்டி வருகின்றனர் ஜப்பான் ரஜினி ரசிகர்கள். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படம் வருகிற பத்தாம் தேதி வெளியாக உள்ளது.

Rajinikanth உடல்நலம் குறித்து பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் Sathyaraj..! 1

இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து உள்ளனர். மேலும் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடித்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய இவர், உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலம் சரியாகி குணமடைய வேண்டி வீடியோ வெளியிட்டு உள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் உடன் பல படங்கள் நடித்து வெற்றிகளை கொடுத்தவர் சத்யராஜ். தற்போது கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

வெளியிட்டது

புதிய செய்திகள்