உதயநிதி ஸ்டாலினை ப்ராடுகார பயலே, அளவா புளுகுடா என்று சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளர். நேற்று சென்னையில் நடந்த விக்ரம் இசை மற்றும் வெளியீட்டு விழாவில் முதலமைச்சரின் மகனும் எம்எல்ஏவுமாகிய உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசும் போது, சிலர் என்னிடமே போன் செய்து, எப்படியோ கமலை மிரட்டி விக்ரம் படத்தை வாங்கி விட்டீர்களே? எனக்கேட்டனர். நான் யாரையும் மிரட்டவும் இல்லை, மிரட்டினால் பயப்படும் நபரும் கமல்ஹாசன் அல்ல, அவரது ரசிகனாக இந்த படத்தை வெளியிட நினைத்தேன் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்து மேடையில் பேசிய கமல், போன் போட்டு உதயநிதி கேட்ட போது அரசியல் வேறு, இது வேறு என்று தாம் கூறியதாகவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு நண்பர் எனவும் கூறினார். நானும் ரஜினியும் தொழிலில் போட்டி போட்டாலும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களே, அதே போல தான் மு.க.ஸ்டாலினும் அரசியலில் போட்டி போட்டாலும் நல்ல நண்பர் எனக்கூறினார். மேலும் தனக்கு தமிழின் மீது காதல் வர கலைஞரும் ஒரு காரணம் எனக் கூறினார். தாத்தா முதல் பேரன் வரை எனக்கு நட்பு இருப்பதாக கூறி கலைஞர் தொடங்கி உதயநிதி வரை தமக்கு இருக்கும் நட்பு குறித்து பெருமைப்பட்டார் கமல்.
தான் மிரட்டி வாங்கவில்லை என்பதை உதயநிதி தெளிவுபடுத்திய பின்பும், கமலும் அதை உறுதிப்படுத்திய பின்பும் கூட சவுக்கு சங்கர் உதயநிதியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “டாய் ப்ராடுப்பயலே. கமல் கோபுரம் பிலிம்ஸ்க்கு வித்த படத்தை, துபாய்ல இருந்து மதுரை அன்புச் செழியனுக்கு போன் பண்ணி நீ வாங்குனது, மொத்த இண்டஸ்ட்ரிக்கே தெரியும். அளவா புளுகுடா” என்று ட்வீட் செய்துள்ளார். அவரின் ட்வீட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
Tweet Original Source from: Savukku_Shankar