Categories: சினிமா

தனுஷை தொடர்ந்து தனது 2வது மனைவியை பிரிகிறாரா செல்வராகவன்.?? வைரலாகும் ட்வீட்.!

வெளியிட்டது

இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் தற்போது பகிர்ந்திருக்கும் ஒரு பதிவு அவரது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டாம் திருமணமும் கசந்து விட்டதா என்றும், இரண்டாவது மனைவியையும் அவர் பிரிய இருக்கிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் தான் செல்வராகவன். இவர் நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார். இவர் முதன்முறையாக 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ என்ற படத்தில் எழுத்தாளராக திரைத்துறைக்கு அறிமுகமானார். பின்னர் 2003 ஆம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதற்குப் பிறகு இவர் 7g ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல படங்களை இயக்கியும், எழுத்தாளராக பணியாற்றியும் இருக்கிறார். இவர் கடைசியாக தனது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.

தனுஷை தொடர்ந்து தனது 2வது மனைவியை பிரிகிறாரா செல்வராகவன்.?? வைரலாகும் ட்வீட்.! 1

செல்வராகவன் 2003ஆம் ஆண்டில் காதல் கொண்டேன் படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது அவர் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2011 ஆம் ஆண்டு அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்., அவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். தற்போது செல்வராகவன், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து ட்ரைலர், டீசர் என வெளியாகி அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வாழ்க்கை குறித்து அவர் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.


அதில் அவர் தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம், நடுவில் என்ன துணை வேண்டி கிடைக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் மனைவியுடன் ஏதும் பிரச்சனையா? இரண்டாவது மனைவியும் விவாகரத்து செய்யப் போகிறாரா என்று அவரது ரசிகர்கள் அந்த பதிவிற்கு கீழ் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் இவரது தம்பியும் நடிகருமான தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்திருந்தார். செல்வராகவன் போட்ட புதிய பதிவால் தனுஷை தொடர்ந்து செல்வராகவனும் மனைவியை விவாகரத்து செய்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.!

ஆனால் சில நெட்டிசன்களோ மோகன் ஜி படத்தில் நடித்து வருவதால் தான் செல்வராகவன் இப்படி ஆகிவிட்டார் என்று கமெண்டுகளில் காமெடியாக பதிவிட்டு வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்