செம்பருத்தி சீரியலில் நடித்த நடிகை ஒருவர், அந்த சேனல் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர்தான் ‘செம்பருத்தி’. இது விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆல்யா மற்றும் சஞ்சீவ் நடித்த ராஜா ராணியை காப்பியடித்து எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ராஜா ராணி சீரியலில் வீட்டில் வேலை செய்யும் ஆல்யாவை வீட்டு உரிமையாளர் மகன் சஞ்சீவ் காதலித்து திருமணம் செய்து கொள்வார். அதே போல தான் செம்பருத்தி சீரியலும், மிகப்பெரிய குடும்பத்தில் வேலை பார்க்கும் பார்வதியை குடும்பத்தின் வாரிசு ஆதி காதலித்து திருமணம் செய்து கொள்வார். இது அவரின் தாயார் அகிலாண்டேஸ்வரிக்கு தெரியாமல் மறைத்து மறைத்து வைத்திருப்பார்கள். அதை அகிலா எப்படி கண்டு பிடிக்கிறார்? என்று கதை நகர்ந்ததால் விறுவிறுப்பு கூடியது.

ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கனா காணும் காலங்கள் கல்லூரி கதையில் ஹீரோவாக நடித்த கார்த்திக் நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் விலகிவிடவே சீரியலின் மவுசு மிகவும் குறைந்தது. பின்னர் அக்னி என்பவர் அந்த ரோலில் நடித்து வந்தார். சீரியல் ஆரம்பித்து 5 வருடம் ஆன பின்பும் கதை ஜவ்வாக இழுத்ததால் மக்கள் பலரும் அந்த தொடரை பார்ப்பதை நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் ஹீரோயின் ஷபானாவும் சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவசர அவசரமாக கதையை முடித்து பேக் செய்து கிளம்பிவிட்டனர். கடந்த ஞாயிற்றுக் கிழமையோடு நாடகம் முடிவுக்கு வந்தது. இறுதி எபிசோடு மட்டும் பல மணிநேரம் ஒளிபரப்பானது. இறுதியில் வில்லிகளான நந்தினி, வனஜா ஆகியோர் இறந்து விடுவது போன்று காட்டப்படுகிறது. மேலும் கதையின் முக்கிய கதாபாத்திரமான அகிலாண்டேஸ்வரியும் இறந்து விடுவது போன்று காட்டப்பட்டது.
சீரியல் முடிந்த பின்பு, குழுவினர் கொண்டாடும் ஷோவும் ஒளிபரப்பானது. அதில் சீரியலில் நடித்த குழுவினர் அனைவரும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்த நாடகத்தில் வில்லியாக நந்தினி கேரக்டரில் நடித்த நடிகை மௌனிகா அந்த ஷோவில் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறியுள்ளார். இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், நான் என்னுடைய பெஸ்டை கொடுத்த போதிலும், சேனல் எனக்க்காக எதுவும் திருப்பி செய்யவில்லை, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர்களை மட்டுமே கொண்டாடுகிறீர்கள், எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் உங்களுக்கு தோன்றவில்லையா? ஜீ தமிழ். என்னை எதற்காக அழைத்தீர்கள்? என் மொமண்டோ எங்கே? என்னை இன்சல்ட் செய்து விட்டீர்களே, நான் சோகமாக இருக்கிறேன். ஆனால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு என்னை கொண்டாடுகிறார்கள். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.