Categories: சினிமா

எப்படி இருக்கிறது செம்பி திரைப்படம்.! முழு திரை விமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

வெளியிட்டது

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா என்று ஒரு மிகப்பெரிய பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் நான் செம்பி. கும்கி, மைனா, கயல் போன்ற வெற்றி படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டார் இயக்குனர் பிரபு சாலமன். தற்போது மீண்டும் மலை, மலை கிராமங்கள் என்று தனது பார்வையை திருப்பி இருக்கிறார். அதில் ஒன்றாக இன்று வெளிவந்திருக்கும் படம் தான் செம்பி. இந்த படத்தை ட்ரிடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் பிரசன்னா என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் கும்கி, மைனா போன்ற படங்களுக்கு நிகராக இருந்ததா? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பது குறித்து தற்போது இந்த விமர்சனத்தில் காணலாம்.

எப்படி இருக்கிறது செம்பி திரைப்படம்.! முழு திரை விமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 1
புலியூர் என்கிற ஒரு மலைக் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் கோவை சரளா. இவருடைய பேத்தி தான் செம்பி. தாய் தந்தையை இழந்த செம்பி தனது பாட்டியுடன் மலை கிராமத்தில் வசித்து வருகிறார். மலையில் கிடைக்கும் தேன் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து அதை சந்தைக்குச் சென்று விட்டு அந்த காசில்தான் வாழ்ந்து வருகிறார் கோவை சரளா. மேலும் ஒரு நாள் கடினமான மலைப்பகுதிக்கு சென்று அங்கு தேன் எடுத்து அதை தனது பேத்தியிடம் கொடுத்து சந்தையில் விற்று வருமாறு கூறுகிறார். அந்த சிறுமி செல்லும் வழியில் பணக்கார வீட்டு இளைஞர்கள் மூன்று பேரால் பாலியல் கொடுமை செய்யப்பட்டு மலைப்பகுதியில் தூக்கி வீசப்படுகிறார். இந்த செய்தி கோவை சரளாவிற்கு கிடைக்க உடனடியாக பேத்தியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார். செந்நாய் கடித்துவிட்டதாக அனுமதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், உங்கள் சிறுமையை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறுகின்றனர். இந்த செய்தியை உடனடியாக காவல்துறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதை விசாரணை செய்ய இன்ஸ்பெக்டர் வருகிறார்.


பின்னர் இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெறுகிறது. விசாரணையில் சிறுமியை வன்கொடுமை செய்தது எதிர்க்கட்சித் தலைவரின் மகனும் அவருடைய நண்பர்களும் என்பது தெரிய வருகிறது. இதை தெரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் சிறுமிக்கு நீதி கிடைக்காமல் மூன்று கோடி பேரம் பேசி இந்த வழக்கை முடிக்கப் பார்க்கிறார். இந்த வழக்கை முடிப்பதற்காக கோவை சரளாவின் வீட்டிற்கு செல்லும் அவர் அவருக்கு தெரியாமல் கையெழுத்து வாங்க செல்கிறார். ஆனால் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட கோவை சரளா தனது பேத்திக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவதை விட மாட்டேன் என்று சொல்லி கையெழுத்து போட மறுக்கிறார். இதனால் இன்ஸ்பெக்டர் மற்றும் கோவை சரளாவிற்கு கைகலப்பு ஏற்படுகிறது. இன்ஸ்பெக்டரை அடித்து தாக்கி விட்டு அங்கிருந்து தனது பேத்தியுடன் தப்பி சென்று விடுகிறார் கோவை சரளா. அப்போதுதான் பேருந்தில் அஸ்வினை சந்திக்கிறார். இவர்களின் சந்திப்பு பின்னர் என்ன நடந்தது? பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைத்ததா? வன்கொடுமை செய்த அந்த மூன்று இளைஞர்களை சட்டம் தண்டித்ததா? என்பது தான் படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தில் 90 வயது கிழவி கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கோவை சரளா. நகைச்சுவை செய்து நம்மை சிரிக்க வைத்த கோவை சரளா இந்த படத்தில் நம் மனதை உருகவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார். பேத்திக்காக போராடிய விதம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர துடிக்கும் வீரப் பெண்மணியாகவும், காவல்துறை அதிகாரி வழக்கை வாபஸ் வாங்க சொல்லும் போது துணிச்சலுடன் எதிர்த்து நிற்கும் காட்சிகளும் வியக்க வைக்கிறது. செம்பி கதாபாத்திரத்தில் நடித்திருந்த குழந்தை நிலாவிற்கு எத்தனை பாராட்டுக்கள் கொடுத்தாலும் தகும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அப்படியே தனது உணர்ச்சிகளால் பிரதிபலிக்க வைத்திருக்கிறார். விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி அஸ்வின் தனது சிறப்பான நடிப்பால் கைத்தட்டல்களை பெறுகிறார். மேலும் காசுக்காக இல்லாத வழக்கறிஞர்களாக இல்லாமல் நீதிக்காக போராடும் வழக்கறிஞராக தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பேருந்து நடத்துனராக வரும் தம்பி ராமையாவும் அரசியல்வாதிகளாக வரும் நாங்கள் சம்பத்தும், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் போன்றவர்களும் கதையோடு ஒன்றி போய் விறுவிறுப்பை கூட்டுகின்றனர்.


தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். அப்படி செய்யும் கொடூரன்கள் மீது கடுமையாக சட்டம் பாய வேண்டும் என்பதை மிக அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறது செம்பி திரைப்படம். திரைக்கதையில் எந்த ஒரு சுணக்கமும் இல்லை, சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. ஆனால் கதையின் ஓட்டம் எதையும் அது கெடுக்கவில்லை. ஒளிப்பதிவு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. மலைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட காட்சிகளும் பாடல்களும் மிக அருமை. பின்னணி இசையும், பேருந்தில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சிகள், கோவை சரளாவின் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்ட விதமும், வடிவமைப்பும் மிக அற்புதமாக இருந்தது. படத்தின் எடிட்டிங்கும், முதல் பாகமும் விறுவிறுப்பை கூட்டுகின்றன.


படத்தின் பாசிட்டிவ் விஷயங்கள்:

  1. கதை மற்றும் திரைக்கதை.
  2. அழகான ஒளிப்பதிவு.
  3. மலைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் கோவை சரளா, செம்பியாக நடித்திருக்கும் சிறுமி, அஸ்வின் குமார் ஆகியோரின் நடிப்பு.
  4. சிறப்பான எடிட்டிங்.
  5. பேருந்து காட்சிகள்.

படத்தின் நெகட்டிவ் விஷயங்கள்:

  1. சில இடங்களில் ஏற்படும் லாஜிக் ஓட்டைகள் கிளைமாக்ஸை வேறு விதமாக எடுத்துச் சென்றிருக்கலாமோ என்று தோன்ற வைக்கிறது.

சமூகத்திற்கு தேவையான ஆணித்தரமான விஷயங்களை பதிவு செய்துள்ள செம்பிக்கு தமிழ்கிளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.5/5

Youtube Video Code Embed Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்