கோவிலில் வைத்து மகனுக்கு முதல் முறையாக சோறு ஊட்டிய மிர்ச்சி செந்தில் ஸ்ரீஜா தம்பதிகள்.!

வெளியிட்டது

திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த மகனுக்கு கேரளாவில் வைத்து அன்ன பிரசன்னம் என்னும் சோறு உண்ணும் விழாவை நடத்தி இருக்கிறார். மிர்ச்சி செந்தில் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜா அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோவிலில் வைத்து மகனுக்கு முதல் முறையாக சோறு ஊட்டிய மிர்ச்சி செந்தில் ஸ்ரீஜா தம்பதிகள்.! 1

ரேடியோ மிர்ச்சி மூலமாக மக்களுக்கு பிடித்தமான நபராக இருந்தவர் செந்தில். இவருக்கு முதன்முறையாக விஜய் தொலைக்காட்சியில் மதுர என்னும் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாடகத்துக்கு பின்னர் செந்திலின் மவுசு மிகப்பெரிய அளவில் கூடியது.

தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்கிற சீரியலில் சரவணனாக நடித்தார். இந்த நாடகம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுத்திருந்தது. நாடகத்தில் மீனாட்சியாக நடிகை ஸ்ரீஜா நடித்திருந்தார். இருவருக்கும் திரையில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக, நிஜத்திலும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.


செந்திலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்த நிலையில் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு 2014 ஆம் ஆண்டு ஸ்ரீஜாவை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீஜா கேரளாவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் இணைந்து சில வெப் சீரிஸ்களில் நடித்து வந்தனர்.

கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் செந்தில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்திருந்தார். தற்போது அவர் விஜய் டிவியை விட்டு விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அந்த புகைப்படங்களை instagram பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

மேலும் தனக்கு மகன் பிறந்திருப்பதாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியையும் கூறியிருந்தார். தொடர்ந்து தற்போது மகனின் புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு பெயர் வைத்திருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்திருந்தார்.


தன் மகனுக்கு ஸ்ரீ வல்லப தேவ் என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்திருந்தார். அவர் தற்போது கேரளாவில் கோவிலில் வைத்து முதன்முறையாக உணவு கொடுக்கும் விழாவை நடத்தி இருக்கிறார்.

கேரள முறைப்படி முதல் முறையாக உணவு கொடுக்கும் பொழுது கோவிலில் வைத்து அதை ஒரு விழாவாக கொண்டாடுவது வழக்கம். அன்னப் பிரசன்னம் என்னும் அந்த விழாவை தான் தற்போது செந்திலும் நடத்தி இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..!கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Senthil Sreeja Originals

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்