சம்பாதிக்கிற காசு பத்தலையா? இப்படியும் சம்பாதிக்கணுமா? ராஜலட்சுமியை திட்டும் நெட்டிசன்கள்

வெளியிட்டது

சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி செய்துள்ள வேலையை நெட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே பல வழிகளில் காசு சம்பாதித்து வருகிறீர்கள், இன்னமும் காசு சம்பாதிக்க வேண்டுமா என்று அவர்களை திட்டி தீர்த்து வருகின்றனர். என்ன மச்சான் சொல்லு புள்ள என்கிற ஒரு பாடல் மூலமாக பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. இவர்கள் ஆரம்பத்தில் நாட்டுப்புற பாடல்களை பாடி பட்டி தொட்டி எங்கும் பரப்பி வந்தனர். இதனால் இவர்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீசனின் வெற்றியாளராக செந்தில் கணேஷ் வந்தார். ஆனால் ராஜலட்சுமியால் வெற்றி பெற முடியவில்லை. அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறி இருந்தார்.

சம்பாதிக்கிற காசு பத்தலையா? இப்படியும் சம்பாதிக்கணுமா? ராஜலட்சுமியை திட்டும் நெட்டிசன்கள் 1

இருந்தாலும் ராஜலட்சுமிக்கு புஷ்பா படத்தில் வரும் வாயா சாமி பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பின்னர் அவர் மிகவும் பிரபலமானார். மேலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என்று பல இடங்களுக்கு சென்று கச்சேரி செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட அவர்கள் மிகப்பிரமாண்டமான ஒரு வீடு கட்டி அந்த வீட்டுக்கு பால் காய்ச்சி முடித்திருந்தனர். மேலும் தங்களது பிள்ளைகளுக்கு காது குத்து விழாவையும் மிகப் பிரம்மாண்டமாக நடத்தியிருந்தனர். இப்படி ஒவ்வொன்றையும் பிரம்மாண்டமாக செய்து வரும் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்தும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ராஜலட்சுமி செய்துள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்.

 

ஏற்கனவே பல வழிகளில் பணம் சம்பாதித்து வரும் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜலட்சுமி தற்போது அவரது மாமியாருக்கும் ஒரு யூடியூப் சேனலை தொடங்கி இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் ஏற்கனவே சம்பாதிக்கும் காசு பத்தவில்லையா என்று கடுமையாக கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரின் ரசிகர்கள் அவர்கள் உழைக்கிறார்கள் சம்பாதிக்கிறார்கள் உங்களுக்கு என்ன கவலை என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Anjalai ammal

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்