Categories: சினிமா

நாங்க அம்மா அப்பா ஆக போறோம்..! ஆசையாக அறிவித்த வானத்தை போல சீரியல் ராஜபாண்டி..!

வெளியிட்டது

சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் கார்த்தி. இந்த சீரியலை தொடர்ந்து குலதெய்வம், கல்யாணம் முதல் காதல் வரை , அரண்மனை கிளி மற்றும் ரெக்கை கட்டி பறக்குது மனசு என்ற சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகினார். ஆனால் இவர் பல சீரியல்களில் நடித்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சீரியலிலும் கிடைக்கவில்லை.

நாங்க அம்மா அப்பா ஆக போறோம்..! ஆசையாக அறிவித்த வானத்தை போல சீரியல் ராஜபாண்டி..! 1

இதனால் வெற்றிக்காக போராடிய இவருக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த வானத்தை போல சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறார் ராஜபாண்டி. அவர் எதிர்பார்த்த வெற்றியை இந்த சீரியல் பெற்றுக்கொடுத்து உள்ளது.

அண்மையில் இவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது இவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து உள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை மகிழ்ச்சியாக கொடுத்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்