ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த இவர் திவ்யா. சின்னத்திரையில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடினார். வாய்ப்பு தேடிய இவருக்கு கேளடி கண்மணி என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி நடித்து சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். 2015ஆம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பாகிய இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

இந்த தொடரின் வெற்றி திவ்யாவுக்கு அடுத்தடுத்து சுமங்கலி,லட்சுமி வந்தாச்சு,கிராமத்தில் ஒரு நாள் என்ற சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது. அனைத்தயும் சரியாக பயன்படுத்தி நடித்த இவருக்கு தற்போது பாக்கியலட்சுமி தொடரில் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது.
தற்போது இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் திவ்யா. அவருக்கு ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.