விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மாபெரும் வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது. நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் எதிர்பாராத விதமாக முடிவுக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்த நிலையில், இந்த தொடரின் சீசன் 2வை ரசிகர்களுக்காக புதிய கதையுடன் இயக்கி வருகிறது.

இந்த தொடரில் தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தான் சரண்யா. இதற்குமுன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், இவருக்கான வரவேற்பு ஆனது இந்த சீரியலில் தான் கிடைத்து உள்ளது. இந்த தொடரின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார் சரண்யா. இவருக்கு திருமணம் ஆகியது அண்மையில் தான் இவரின் ரசிகர்களுக்கு தெரிய வந்து உள்ளது.
அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், திருமணம் ஆனது குறித்து ஏன் வெளியே சொல்லவில்லை என கேள்வி கேட்டதற்கு, பதிலளித்த அவர், அது தன்னுடைய பெர்சனல் வாழ்க்கை என்பதால் பெர்சனலாக இருக்கட்டும் என வெளியே சொல்லவில்லை என கூறியுள்ளார்.