சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சீரியல் நடிகை சஹானா. இவருக்கு சின்னத்திரையில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது வில்லத்தனமான நடிப்பில் ரசிகர்களை அதிகம் கவர்ந்து உள்ளவர் இவர்.சன்டிவி சீரியல்களில் மட்டுமில்லாமல் விஜய் டிவி சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் சஹானா.

பகல் நிலவு,அழகு என பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த தாலாட்டு சீரியலிலும் நடித்து இருக்கிறார். இந்த தொடரிலும் இவர் கதாபாத்திரம் ரசிகர்களால் நல்ல வரவேற்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில்,தற்போது சஹானாவுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.
மகளுடன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் மகளுக்கு மொட்டையடித்து காதுகுத்தும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.