வாய்ப்பு தராமல் ஏமாற்றிய விஜய் டிவி.! டிவியில் இருந்து விலகி போட்டி சேனலுக்கு சென்ற நடிகை ஸ்ரீநிதி

வெளியிட்டது

விஜய் டிவியின் செந்தூரப்பூவே என்கிற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஸ்ரீநிதி தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்றுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் பாண்டவர் பூமி, நேசம் புதுசு போன்ற படங்களில் நடித்து முத்திரை பதித்த நடிகர் ரஞ்சித்துடன் இணைந்து செந்தூரப்பூவே என்ற சீரியலில் கமிட்டானார். இவருக்கு இதுதான் முதல் சீரியல். இந்த சீரியலில் வயது குறைவான பெண் ஒருவர், வயதில் மூத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்வது போன்ற ஒரு ரோலில் நடித்தார்.ஸ்ரீநிதி. 22 வயதான ஸ்ரீநிதி இப்படியான ஒரு பக்குவப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்ததால் அவரை பலரும் பாராட்டினர். யதார்த்தமான நடிப்பாங் முதல் சீரியலிலேயே பல ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ரீநிதி.

வாய்ப்பு தராமல் ஏமாற்றிய விஜய் டிவி.! டிவியில் இருந்து விலகி போட்டி சேனலுக்கு சென்ற நடிகை ஸ்ரீநிதி 1

இந்த நிலையில் செந்தூரப்பூவே சீரியல் பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பான போது சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பிக்பாஸ் முடிந்த பிறகு மீண்டும் துவங்கப்பட்ட இந்த சீரியல், பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் திடீரென ஒரு நாள் சீரியல் முடிந்து விட்டதாக விஜய் டிவி அறிவித்தது. சீரியல் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து இந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகளிடம் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தனர் ரசிகர்கள். குறிப்பாக இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிதியிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரும் தனக்கும் எதுவும் தெரியாது, சீரியல் நிறுத்தப்பட்டது தமக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்ததாக கூறியிருந்தார். மீண்டும் ஸ்ரீநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் அவருக்கு விஜய் டிவியில் எந்த சீரியலும் கிடைக்கவில்லை.

 

இதனால் ஜீ தமிழ் பக்கம் சென்ற ஸ்ரீநிதி அங்கு சில நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். தற்போது ஸ்ரீநிதிக்கு ஜீ தமிழில் புதிதாக ஒரு சீரியலில் கிடைத்துள்ளது. தெய்வம் தந்த பூவே தொடரின் இரண்டாவது பாகத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த தொடர் வருகிற திங்கள் முதல் மதியம் 2:30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் விஜய் டிவியை விட்டு ஸ்ரீநிதி விலகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்